தமிழில் உங்கள் பலன்களை அறிய ஜோதிடம்.கொம்
 

முதற்பக்கம் எண் ஜோதிடம் இராசி பலன் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு

ஜோதிடம்

எண் ஜோதிடம்
இராசி பலன்
   
தியானம்
மந்திரம்
சித்தமருத்துவம்

2011ம் இராசிபலன்கள்
 

 

Dr.P.Esakki

ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி : 0091-4633-243029

செல் : 00919842529691, 00919842510578

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்

இணையத்தளம் : www.gnanayohi.com 

பணம் அனுப்ப

NAME : P.ESAKKI

BANK : INDIAN OVERSEAS BANK

A/C No. : 9419

BRANCH :  KADAYANALLUR

DISTRICT : TIRUNELVELI

TAMILNADU

INDIA

 
 

21-7-2014to27-7-2014

 
மேஷம்


இராசிபலன்கள்
21-7-2014முதல்27-7-2014வரை
1.மேசம:;-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22,23உறவினர்கனின் எதிர்பாராத திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகலாம். யாத்திரையின் போது மற்றவர்களிடம் முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்வதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள். வங்கிகளில் இருந்து வெகுகாலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.ஜீலை24,25,26 சேர் மார்க்கெட்,கமிசன் தரகு ஏஜன்சி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,மாமிச சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அடகுக்கடை நடத்துபவர்கள்,பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. விவசாயம் சுமாராகப் பலிதமாகும்.பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டு;களும் பொருள் வரவும் உண்டாகும்.ஜீலை27காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். உடம்பில் சளி அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும்.கணவன் மனைவி உறவுகளில் இது நாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.


இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வரவும்.


ரிசபம்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய்; நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22,23அண்டை அயலார்களுடன் காரணமற்ற சிறிய விசயங்களுக்காக வீண் பிர்ச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.ஜீலை24,25,26ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ள காலமாகும்.. உடம்பில் வாயு ,வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். வீட்டை அலங்கரிப்பதிலும்,வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் பொருட் செலவுகள் ஏற்படலாம்.நெருப்பு ராணுவம் காவல்துறைகளைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,எரி பொருள் வியாபாரிகள்,மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடிய காலமாகும்..ஜீலை27புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மற்றும் பரிசு பாராட்டுக்களும் கிடைக்கும்.மாணவர்களுக்கு அரசு சம்பந்தமான உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துரக்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.


மிதுனம்

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பயிலும் மாணவர்கள்,இசைத் துறை, சினிமா நாடகம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். ஜீலை22,23,24ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்~;டம் மூலம் ஒரு சிலருக்கு பண வரவுகள் உண்டாகும். வெளிநாட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய கடனகள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வேறு மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள்.பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில்களை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்..யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.ஜீலை25,26,27வடக்கு திசையில் இருந்து பெண்களால் எதிர் பாரத ஆதாயம் உண்டாகும்..மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள். அலுவலகப் பணி ஆற்றுபவர்களுக்கு இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ள காலமாகும். சகோதர சகோதரிகளின் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காண்பீர்கள்.பொதுவாக இது ஒரு எச்சரிக்கையான வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வரவும்.


கடகம்

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22,23குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள்,பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள், ஆலயப் பணி புரிவோர்கள்,வங்கி எழுத்தாளர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள், பத்திரிக்கையாளர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,நாடகக் கலைஞர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள்,
பாடலாசிரியர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன் தரக் கூடிய காலமாகும்.ஜீலை24,25குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.அரசு சம்பந்தமான விசா போன்ற பிரச்சனைகளில் நல்ல சாதகமான தகவல்கள் வந்து சேரும்.ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகளைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது.ஜீலை26,27காதல் விசயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது உத்தியோகம் பாரப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடங்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம்.அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று பொருமையுடன் இருத்தல் நல்லது. தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்த வரவும்.


சிம்மம்

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21உடம்பில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம்.மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள்.உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.ஜீலை22,23,24உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும். கட்டி முடிக்கப் படாத தடை பட்ட ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.ஜீலை25,26,27அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லதாகும். தண்ணீர்,ஐஸ் போன்ற திரவப் பொருட்கள் மற்றும் குளிர் பான வியாபாரிகள்,உப்பு உரம் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர்கள் வியாபாரிகள்,நீர்வளத் துறை சார்ந்தவர்கள்,கப்பல் பணி புரிவோர்கள்ஈமருத்துவத் தொழிற் செய்வோர்கள்,மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.


கன்னி

6.கன்னி::-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த தீர்த்த யாத்திரைகள் சென்று வர வாய்ப்புகள் உள்ளது.குடும்பத்தில் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும்.ஜீலை23,24,25நீண்ட காலமாக இருந்து வந்துள்ள காதல் விசயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.பூஜைப் பொருள் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,கம்யுட்டர் தொழிற்செய்வோர்கள்,பூஜைப் பொருட்களை வியாபாரம் செய்வோர்கள்,பழம்,கூல்டிரிங்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.ஜீலை26,27ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளை பழுதுபார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம் உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் புதிய பொருப்புக்களும் உண்டாகலாம். நில புலன்கள் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும்.உத்தியோகம் பார்பவர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமை
யுடன் பணி ஆற்றுதல் நல்லதாகும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.


துலாம்

7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை21மற்வர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட் செலவுகளும்,மன நிம்மதி இன்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.ஜீலை22,23,24செய் தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் யாத்திரை சென்று வருதல் நல்லது காய்கறிகள்,இலை,கீரை போன்ற உணவுப் பொருள்கள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறையை சார்ந்தவர்கள்,அழகுக் கலைக் கூடங்களை நடத்துபவர்கள், சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துபவர்கள்,நகைக்கடை நடத்துபவர்கள்,சினிமா மற்றும் நாடக துறைகளைச் சார்ந்தவர்கள்; ஆகியோர்கள் மிகுந்த நற் பலன்களை அடைவார்கள். கூட்டுத் தொழிற் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும்.ஜீலை25,26,27புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள்.
பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும்.மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொண்டு அவதிப்படாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். .வர வேண்டிய பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.விசா போன்ற வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு எச்சரிக்கை நிறைந்த வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை.
இராசியான திசை:-தென்கிழக்கு.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம்

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குச் ராகு நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை21,22தாயின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காக நீண்டதூர பயணங்களை மேற் கொள்ளுவீர்கள் மற்றவர்களின் விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைதவிர்த்தல் நல்லது.ஜீலை23,24,25 காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேர இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்..பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.அரசியல் வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை. மீன்,முட்டை, மாமிசம், எண்ணை, பெட்ரோல், டீசல் போன்ற வியாபாரிகள்,அணு சக்தித் துறை சார்ந்த விஞ்ஞானிகள், ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.ஜீலை26,27 விசா பிரச்சனைகளுக்கு எதிர் பார்த்து இருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும் காலமாகும்.பிறரிடம் வேலை செய்பவர்கள் தங்களது பணியில் மிகவும் கவனமுடன் பணி ஆற்றுவது நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்,தந்தையின் உடல் நிலை பாதிப்பால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொதுவாக இது ஒரு சுமாரான நறபலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் நல்லெண்ணை தீபம் இட்டு பிதுர்க்கள் மற்றும் காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.


தனுசு

9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22வீடுகளில் அல்லது யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.உடம்பில் சளி மற்றும் சுர சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.ஜீலை23,24வீடு வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடு பட்டு வருவீர்கள். யாத்திரைகளை சற்று தள்ளிப் போடவும்.. உடம்பில் எலும்பு நரம்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம்..ஆலயங்களில் தொண்டுப் பணிகளைச் செய்வோர்கள்,அலுவலக உதவியாளர்கள்;;.வங்கித் தொழில் புரிவோர்கள்,வழக்கறிஞர்கள்,தபால் தந்தித் துறை சாரந்தவர்கள்,நோட்டு புத்தகம்,பேனா போன்ற ஸ்டேசனரி பொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.ஜீலை25,26,27விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கான நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.காதல் சம்பந்தமாக இது வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும்..இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் எதர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.. பொதுவாக இது ஒரு ஆறுதல் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.


மகரம்

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்கள் சென்று வருவதன் மூலம் மனம் மகிழ்ச்சியை அடைவீர்கள். காதல் விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும். வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் பணம் ஏமாற்றம் அடைய வேண்டாம். ஜீலை23,24 குடும்பச் சொத்து சம்பந்தமாகிய விசயங்களில் பெரிய மனிதர்களிடம் இருந்து எதிர் பாரத்த உதவிகள் கிடைக்கும்.தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள்.வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைத் தேடி தாய் நாடு சென்று வரவுதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்..ஜீலை25,26,27இரும்பு,இயந்திரம்,இரசாயனம்,பழையபொருட்கள் முதலியன விற்பனை செய்வோர்கள், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள்,பல சரக்கு மற்றும் பெட்ரோல் டீசல்,மண் எண்ணை போன்ற எண்ணை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கைவந்து சேரும்.உடல் நிலையில் கண்,காது போன்ற இடங்களில் கவனம் தேவை.பொது
வாக இது ஒரு மகிழ்ச்சி தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் எள்ளெண்ணை தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.


கும்பம்

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை21,22குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் உகந்ததாகும். துலை தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் எதிர் பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள். யாத்திரையின் போது பொருள் இழப்ப ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல லாபம் பெறப் போகும் காலமாகும். ஜீலை23,24,25மின்சாரம், எரிபொருள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கம்யுட்டர் சாதன வியாபாரிகள் இவற்றில் பணிபுரிவோர்கள், இரசாயனம் மற்றும் அணு விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள், காவல் துறை, இராணுவம் இவற்றில் பணி புரிவோர்கள்,மின்சார உபகரணங்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.காதல் விசயங்களில் மற்றவர்களில் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோக் துறையினருக்கப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும்.. மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.ஜீலை26,27வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும் வெகு காலமாக வழி படாமல் விட்டுப் போன குலதெய்வ ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கான காலமாகும்..;.பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் எடுப்பீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள்..பொதுவாக இது ஒரு மன நிம்மதி தரக்கூடிய வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்::-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.


மீனம்

12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22ஒரு சிலருக்குப் புதிய வீடு வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. சமுதாய முன்னேற்றப் பணிக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டு பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வர வேண்டிய பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறு பாடுகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள்.ஜீலை23.24சொத்து விசயமாகக் கோர்ட் வழக்கு போன்றவற்றில் நல்ல சாதகமான முடிவுகளை எதிர் பார்க்க கால தாமதம் ஆகலாம்.மஹான்களின் எதிர் பாராத ஆசிகளால் மன நிம்மதி அடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளி நாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம்.ஜீலை25,26,27உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பணி இட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்படலாம்.. கார் லாரி போன்ற வாகனத் தொழிற் சாலைகளில் பணி புரிவோர்கள்,அரசியல் வாதிகள்,கமிசன் தரகுத் தொழிற் செய்வோர்கள,அரசு உயர்பதவிகளை வகிப்பவர்கள்,வெளி நாட்டு தூதூவர்கள்,ஹோட்டல் பணி செய்பவர்கள், நெருப்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும். தொடரும்!


 

இணையத்தள உரிமை ஜோதிடம்.கொம் 2007 - 2011