|
1-1-2009 முதல் 31-12-2009 வரை
மேசம்
(அசுபதி
1,2,3,4 ஆம் பாதம்,
பரணி 1,2,3.4ஆம்
பாதம், கார்த்திகை
1 ஆம்
பாதம் முடிய)
மேசராசி அன்பர்களே சென்ற ஆண்டில் நீங்கள் மிகவும்
சிரமத்தின் பேரில் பல இன்னல்களையும் அநுபவித்து விட்டீர்;கள்.தற்போது
வந்துள்ள 2009 ஆம் வருடப் புத்தாண்டானது தங்களது வாழ்வில் மிகுந்த
நன்மைகளைச் செய்யப் போகிறது. குரு பகவான் 9ம் இடத்தில் இருந்து 10ம்
இடத்திற்குப் பெயர்ச்சி ஆகி இருப்பதால் செய் தொழில் சம்பந்தமாக இருந்து
வந்த தடைகள் நீங்கிப் புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட
திட்டங்களில் வெற்றி கிடைக்கக் கூடிய காலமாகும். பிள்ளைகளுக்கு
மருத்துவச் செலவுகள் வந்து சேரும்.தந்தையின் உடல் நிலையில் சில
பாதிப்புகள் அடைவார்கள்.அரசியல் வாதிகள்,அந்நிய நாடு செல்ல விருப்பம்
உள்ளவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவார்கள்.மூலம்,வயிறு போன்ற உபாதைகள்
வந்து போகும்.செய்தொழிலில் எதிர் பார்த்ததை விட நல்ல லாபம் அடைவீர்கள்.
இரும்பு,இயந்திரம் இராசாயனம் போன்ற தொழிற் செய்வோர்கள்,
கட்டிடம்,காண்டிராக்ட்,கமிசன்,ஏஜன்சி போன்ற தொழிற்
செய்வோர்கள்,கம்யுட்டர், பெயிண்ட்,மின்சாரம்,எரி பொருட்கள் போன்ற
வியாபாரிகள் மிகுந்த லாபம் அடையக் கூடிய காலமாகும்.
மேற்படிப்பு விசயமாக வெளிநாடு சென்று வரப் போட்டிருந்த
திட்டங்கள் நிறைவேறும்.மருத்துவத் துறை சார்ந்த கல்வி கற்போர்களுக்கு
பரிசும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.கல்வி விசயமாகப் புதிய கடன் வாங்கி
அடைப்பீர்கள்.இட மாற்றத்துடன் கூடிய பதவி உயர்வுகள் ஏற்படலாம்.
மேலதிகாரிகளால் எதிர் பாராத ஆதாயம் அடைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகக் கூடிய காலமாகும்.கணவன் மனைவி
உறவுகள் நன்றாக இருக்கும்.காதல் விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன்
நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி
நல்ல பணப் புழக்கம் காணப்படும்.பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைய
வாய்ப்பு உள்ளது.
சிறப்பு பலன்கள்
பொதுவாக இந்த ஆண்டில் பொருளாதாரம் முன்னேற்றம்
காணப்படும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது.
இராசியான எண்:-
9,3
இராசியான நிறம்:- சிகப்பு,மஞ்சள்
இராசியான திசை:- தெற்கு,வடகிழக்கு
பரிகாரம்
செவ்வாய்,வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து முருகன்,சிவன்
ஆலயங்களுக்குச் சென்று பூஜித்து ஏழைகளுக்கு அன்னதானமும், சிகப்பு,
வெள்ளை வஸ்திர தானமும் செய்து வருவதால் கிரக தோசங்கள் குறைந்து
நற்பலன்கள் உண்டாகும்!
மந்திரம்
1. ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேனாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்!
2.ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத!
என்று மந்திரம்
சொல்லி வழிபட்டு வரவும்.
ரிசபம்
(கார்திகை 2,3,4ஆம்
பாதம், ரோகிணி
1,2,3,4ஆம் பாதம்,
மிருகசீரிடம் 1,2ஆம்
பாதம் முடிய)
ரிசபராசி அன்பர்களே உங்களது ராசிக்கு புதிய வீடு,நிலம்
வாங்குவதற்காகக் போட்டிருந்த திட்டங்களில் முன்னேற்றமான சூழல்
உருவாகும்.தங்களுக்கு உடல் நிலையில் இது வரை இருந்து வந்ந பிரச்சனைகள்
குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும்.தேவையற்ற புதிய நண்பர்களின்
தொடர்புகளால் செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்பட இருப்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் பழகி வருதல் நல்லது.சமுதாய முன்னேற்ற
நற்பணிகளுக்கான முயற்சிகளில் ஈடு பட்டு நற்பெயர்,புகழ் ஏற்படும்.காதல்
சம்பந்தமான பெண்கள் விசயத்தில் மன உழைச்சலுடன் கூடிய பொருள் விரையம்
ஏற்பட இருப்பதால் கவனம் தேவை.தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச்
செலவுகள் வந்து சேரும். தீர்த்த யாத்தரை செல்லுவதற்காக நீண்ட தூரப்
பயணங்களை மேற் கொள்வீர்கள்.அரசு வழக்கு சம்பந்தமான விசயத்தில் சாதகமான
நல்ல தீர்ப்புகளை எதிர் பார்ப்பதில் கால தாமதம் ஏற்படும்.பழைய
கட்டிடங்களைப் புதுப்பித்து கட்டப் போட்ட திட்டங்கள்
நிறைவேறும்.இரும்பு,பித்தளை,செம்பு போன்ற உலோக வியாபாரிகளும், இயந்திரம்,
இராசயனம், பெட்ரோல்,டீசல்,எண்ணை,பலசரக்கு போன்ற
வியாபாரிகளும்,வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்த பேராசியர்களும்
நல்ல பலனை அடைவார்கள்.கல்வியில் நல்ல மதிப்பெண்களுடன் பரிசும்
பாராட்டுதல்களையும் பெறப் போகிறீர்கள்.விளையாட்டுத்துறை
சார்ந்தவர்களுக்கு சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.உத்தியோகத்
துறையினர்களுக்கு இது வரையில் தடை பட்டு வந்த தடைகள் நீங்கி உத்தியோக
உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு ஏற்படும்.ஒரு சிலருக்கு உத்தியோக விசயமாக
வெளிநாடு சென்று வரக் கூடிய காலமாகும்..பிள்ளை இல்லாதவர்களுக்கு
புத்திர பாக்கியம் உண்டாகும்.பிரிந்துள்ள கணவன் மனைவி ஒன்று சேர்ந்து
வாழ வாய்ப்பு உள்ளது.
சிறப்பு பலன்கள்:-
பொதுவாக இந்த ஆண்டில் தங்கள் உடல் நிலையில் நோய்கள் குறைந்து
மருத்துவச் செலவுகள் குறையும்.பிரிந்துள்ள கணவன் மனைவி ஒன்று
சேருவார்கள்.
இராசியான எண்:-6,8
இராசியான நிறம்:-வெள்ளை,நீலம்
இராசியான திசை:-தென்கிழக்கு,தென்மேற்கு
பரிகாரம்:-
வெள்ளி,சனிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாலட்சுமி
வழிபாடு,சனீஸ்வர வழிபாடு செய்து வெள்ளை மற்றும் நீல வஸ்திரம்
மற்றவர்களுக்குத் தானம் கொடுத்து வர கிரக தோசங்கள் குறைந்து நல்ல
பலன்களைச் செய்யும்!
மந்திரம்
1.ஓம் பார்க்கவாய வித்மஹே
அசுராச்சார்யாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!
2.ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்!
என்று மந்திரம்
சொல்லி வழிபட்டு வரவும்.
மிதுனம்
(மிருகசீரிடம்3,4ஆம்பாதம்,திருவாதிரை1,2,3,4ஆம்
பாதம்,புனர்பூசம்1,2,3ஆம் பாதம்முடிய)
மிதுனராசி அன்பர்களே இந்த ஆண்டில்
திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கி
சுப காரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும்.குடும்பச் சொத்துக்கள்
போன்ற விசயத்தில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்ல முடிவுகள்
கிடைக்கும். சகோதர,சகோதரிகளால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில
ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வராத கடன் கொடுத்திருந்த
பணம் அந்நிய நபர்களால் திரும்பக் கிடைக்கும்.வெளிநாடு சென்று வருதல்
போன்ற தொழில் சம்பந்தமாகிய விசயத்தில் வெற்றி கிடைக்கும். அரசு வழக்கு
சம்பந்தமாகிய விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல முடிவுகள்
கிடைக்கும்.சேர் மார்க்கெட் நடத்துவோர்கள்,தங்கம், வெள்ளி போன்ற நகைத்
தொழிற் கூடங்கள் நடத்துவோர்கள்,பெட்ரோல்,டீசல் போன்ற எண்ணை வியாபாரம்
செய்யக் கூடியவர்கள் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லதாகும்.புதிய
வீடு,நிலம் வாங்குதல் போன்ற முயற்சிகளைச் சற்று கால தாமதமாகச்
செய்யவும்.புதிய கடன்களை வாங்கினால் குறிப்பிட்ட காலத்தில் திரும்பச்
செலுத்த இயலாமற் போகும் என்பதால் கடன் வாங்குவதைத்
தவிர்க்கவும்.கமிசன்,தரகு,ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய
பொருட்கள் விற்பனை செய்வோர்கள்,சட்டத் துறை சார்ந்த
பேராசிரியர்கள்,உணவுப் பொருள் வியாபாரிகள்,ஏற்றுமதி இறக்குமதி தொழிற்
செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.கணவன் மனைவி உறவுகளில்
நல்ல ஒற்றுமை காணப்படும்.திடீர் அதிர்ஸ்டத்தால் எதிர் பாராத பண வரவு
உண்டாகும்.
சிறப்பு பலன்கள்
பொதுவாக இந்த ஆண்டில் நீண்ட காலமாக வராத பணம் வந்து சேரும்.எண்ணை
மற்றும் பலசரக்கு போன்ற வியாபாரிகள் ,ஏற்றுமதி,
இறக்குமதி தொழிற் செய்வோர்கள் லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.
இராசியான எண்:-5,7
இராசியான நிறம்:-பச்சை,கருஞ் சிகப்பு
இராசியான திசை:-வடக்கு,வடமேற்கு
பரிகாரம்
புதன், திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து
மஹாவிஷ்ணு வழிபாடு, கணபதி வழிபாடு செய்து
பச்சை,கருஞ்சிகப்பு நிற வஸ்திரங்களைத்தானம் செய்து வர சகல கிரக
தோசங்களும் நீங்கி நன்மை தரும்!
மந்திரம்
1.ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோவிஷ்ணு: ப்ரசோதயாத்!
2.ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத்!
என்று மந்திரம்
சொல்லி வழிபாடு செய்து வரவும்.
கடகம்
(புனர்பூசம் 4ஆம் பாதம்,
பூசம் 1,2,3,4ஆம் பாதம்,ஆயில்யம்
1,2,3,4ஆம் பாதம் முடிய)
கடகராசி அன்பர்களே காதல் போன்ற பெண் சம்பந்தமாகிய
விசயங்களில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கக் கூடிய காலமாகும்.விவசாயம்
செய்வோர்களுக்கு அமோக விளைச்சல் காணப் பட்டு அதனால் நல்ல பலன்
பெறுவார்கள்.குடும்பத்தில் தடைபட்டிருந்த திருமண காரியங்கள் நிறைவேற
வாய்ப்பு உள்ளது.மற்றவர்களின் உதவியால் வங்கிகள் மூலம் எதிர் பார்த்து
வந்த பணம் கிடைக்கும்.காணாமல் போன பொருட்கள் திரும்ப வந்து சேரக் கூடிய
காலமாகும்.கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வெற்றி
பெறுவீர்கள்.நீண்ட காலமாக விருப்பத்துடன் இருந்த புதிய வீடு மற்றும்
வாகனங்கள் வாங்குவீர்கள்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மற்றவர்களின்
தூண்டுதலின் பேரில் திரும்பவும் தொடரும்.குடும்பச் சொத்துக்கள்
சம்பந்தமாக சில பெரிய மனிதர்களின் தலையிடுதலால் ஜாதகமான முடிவுகள்
உண்டாகும்.உத்தியோகம் இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து
சேரும்.யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன்
பயணம் செய்து வரவும்.குழந்தைகளின் உடல் நிலை பாதிப்பால் சிற்சில
மருத்துவச் செலவுகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் பார்த்து
வரவும்.பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.
போலீஸ்,ராணுவம், காவல்துறை,
தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள்,ஹோட்டல்,சிற்றுண்டித்
தொழிற்கூடங்கள்,மர வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.வெளிநாடு
செல்லுவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வந்து விலகும்.நண்பர்களிடம்
எச்சரிக்கையுடன் பழகி வருதல் நல்லதாகும்.
சிறப்பு பலன்கள்
பொதுவாக இந்த ஆண்டில் வங்கிகளால் ஆதாயம் அடைவீர்கள்.புதிய தொழில்களைத்
தொடங்குவீர்கள்.
இராசியான எண்:- 2,4
இராசியான நிறம்:- வெள்ளை,கருப்பு
இராசியான திசை:- மேற்கு,வடமேற்கு
பரிகாரம்
திங்கள்,ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் ஆலய வழிபாடு
மற்றும் பிதுர் வழிபாடு செய்து வெள்ளை,கருப்பு வஸ்திரங்களைத் தானம்
செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை தரும்!
மந்திரம்
1.ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!
2.ஓம் பிரம்ம புத்ராய வித்மஹே
ஸைம் ஹிகேயா தீமஹி
தந்நோ ராஹீ: ப்ரசோதயாத்!
என்று ஜெபம் செய்து
வழிபாடு செய்யவும்.
சிம்மம்
(மகம்
1,2,3,4 ஆம்
பாதம், பூரம்1,2,3,4ஆம்
பாதம்,உத்திரம்1ஆம் பாதம் முடிய)
சிம்மராசி அன்பர்களே இப் புத்தாண்டில்
தாங்கள் பட்டு வந்த கஷ்டங்களுக்கு சற்று குறைந்து சிறிது மன நிம்மதி
கிடைக்கும.;மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல்
இருக்கவும்.பிறருக்காக ஜாமீன் போட்டு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளக்
கூடிய காலமாகையால் கவனமுடன் இருக்கவும்.உடல் நிலை பாதிப்பால் மருத்துவச்
செலவுகள் மேலோங்கும். உறவினர்களின்
வரவாலும்,நண்பர்களின் தொல்லைகளாலும் வீண் பொருள் விரையம் ஏற்பட
இருப்பதால் கவனம் தேவை.புதிய தொழில்களை தொடங்குவதற்கான முயற்சிகளைத்
தள்ளிப் போடுதல் சிறந்ததாகும். செய்யாத
குற்றங்களுக்காகப் பழிச் சொல் வந்து சேரும்.ரேஸ் லாட்டரி மூலம் தடீர்
பண வரவுகள் உண்டாகும் என்று நினைத்துப்பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம்
அடையாமல் இருக்கவும்.நீண்ட காலமாக விற்காத பொருட்கள் விற்பனைக்கு வந்து
பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்
வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.
தாயின் உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை.காதல் விசயங்களில்
எதிர் பார்த்தபடி நல்ல தகவல்கள் வந்து சேரும்.பழைய வாகனங்களை விற்றுப்
புதிய வாகனங்களை வாங்க எடுத்துக் கொண்ட முயற்சிகளில் சற்று பின்னடைவு
ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசத்தின் மேல் புதிய வாகனங்களை
வாங்குவீர்கள்.ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகப் பணிகளில் மேலதிகாரிகளுடன்
பிரச்சனைகள் ஏற்பட்டு இட மாற்றம் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் மிகுந்த
எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது வெளி நாட்டில் வசிக்கும் நண்பர்கள்
மற்றும் உறவினர்களி;டம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.குல தெய்வ
வழிபாட்டிற்காக பூர்வீக இடங்களுக்குச் சென்று வருவீர்கள்.
சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில்
காதல் வெற்றி தேடித் தரும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பொருட்
செலவுகள் உண்டாகும்.
இராசியான எண்:-1,9
இராசியான நிறம்:-வெள்ளை,சிகப்பு
இராசியான திசை:-கிழக்கு,தெற்கு
பரிகாரம்:-ஞாயிறு,செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து சூரியநமஸ்காரம,;
துர்க்கை அம்மன் ஆலய வழிபாடும் செய்து வெள்ளை,சிகப்பு நிறமான ஆடைகளைத்
தானம் செய்து வர சகல கிரக தேசங்களும் நீங்கி நன்மை தரும்.
மந்திரம்:-1.ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் சுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்!
2.ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேனாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்! –என்று மந்திரம் சொல்லி வழி படவும்.
கன்னி
(உத்திரம்2,3,4ஆம்பாதம்,ஹஸ்தம்1,2,3,4ஆம்பாதம்,சித்திரை1,2ஆம்பாதம்முடிய)
கன்னிராசி அன்பர்களே இப்புத்தாண்டில் புதிய சொத்துக்கள்
வாங்குவீர்கள்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வந்தடைந்து அதனால்
மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகி
அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுப
காரிய நிகழ்ச்சிகளுக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் சிற்சில தடைகள்
வந்து விலகும்.பொது நலத் தொண்டுகளில் விருப்பமுடன் பணியாற்றுதல் மூலம்
நற் பெயர் புகழ் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பழைய வீடுகளைப் புதுப்பித்துப்
கட்டக் கூடிய காலமாகும்.தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற சில மனக்
கசப்புகள் வந்து விலகும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக்
கசப்புகள் நீங்கி நல்ல சூழ்நிலை காணப்படும்.அரசியல் வாதிகள்,
இசைக்கலைஞர்கள், இசைக் கல்லூரி
நடத்துபவர்கள், இசைத்துறை சார்ந்த
பேராசிரியர்கள், அச்சுத் தொழிற் செய்வோர்கள்,
சினிமா, நாடகம் போன்ற துறை
சார்ந்தவர்கள், வட்டித் தொழிற் செய்வோர்கள்,
சேர் மார்க்கெட் நடத்துபவர்கள் ஆகியோர்களுக்கு மிகுந்த
நற்பலன்களைத் தரக் கூடிய ஆண்டாகும். பழைய
வழக்கு விசயங்களுக்காக சிறிது மன உழைச்சலும் பொருட் செலவுகளும்
உண்டாகும். மின்சாரம் மற்றும் நெருப்பு
ஆகியவற்றில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு சுமாரான
விவசாயப் பலிதமாகும்.அகால போஜனமும் நித்திரை பங்கமும் ஏற்படும்.நீண்ட
காலமாகப் பிரச்சனையில் இருநது வந்த தந்தை வழிச் சொத்துக்கள் திரும்பக்
கிடைக்க வாய்ப்பு உள்ளது.குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகப் புதிய ஆடைகள்
மற்றும் அணிகலன்களை வாங்குவதால் பொருட் செலவுகள் வந்து சேரும்.
சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் குடும்பத்தில் திருமணம்
போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.கலைத்துறையினர்கள் ஆதாயம்
அடைவீர்கள்.
இராசியான எண்:-5,6
இராசியான நிறம்:-பச்சை,வெள்ளை
இராசியான திசை:-வடக்கு,தென்கிழக்கு
பரிகாரம்:-புதன்,வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாவிஷ்ணு
வழிபாடு,மஹாலட்சுமி வழிபாடு செய்து ஏழைகளுக்கு அன்னதானமும்,பச்சை,
வெள்ளை ஆடைகளைத் தானம் செய்து சகல கிரக தோசமும் தீர்ந்து மன நிம்மதியும்
செல்வமும் சேரும்!
மந்திரம்:-
1.ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்!
2.ஓம் மஹாலக்ஷ்மியை ச வித்மஹே
விஷ்ணு: பத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்!
என்று செபம் செய்து
வழி படவும்.
துலாம்
(சித்திரை3,4ஆம் பாதம்,சுவாதி1,2,3,4ஆம் பாதம்,விசாகம்1,2,3ஆம் பாதம்
முடிய)
துலாம் ராசி அன்பர்களே புதிய தொழிற் தொடங்குவதற்காக எடுத்துக் கொண்ட
முயற்சியில் வெற்றி உண்டாகும்.உத்தியோகத் துறையினர்கள் எச்சரிக்கையுடன்
பணி ஆற்றவும்.முன் கோபம் காரணமாக மேலதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்பட்டு
வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.ஒரு சிலருக்கு தனியாகப் பிரிந்து
போய் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.பழைய
பொருட்கள்,அழுகல் சம்பந்தமான, காய்கறிகள்,
கீரை வகைகள்,மீன்,முட்டை மற்றும் மாமிச உணவுப் பொருள்
வியாபாரிகள், அணுசக்தி போன்ற ஆராய்ச்சித்துறை
சார்ந்தவர்கள்,வாகன ஓட்டுனர்கள், திருமணத்
தகவல் மையங்களை நடத்ர்பவர்கள்,பணப் பறிமாற்றம் செய்பவர்கள் ஆகியோர்கள்
நற் பலன்களை அடைவார்கள்.அரசியல் வாதிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை
வியாபாரிகள் ஆகியோர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
அநாதை ஆசிரமம்,பொதுத் தொண்டு நிறுவனங்கள்,கோவில் திருப்பணி
செய்பவர்களுக்கு மன நிம்மதியும் பெயர் புகழும் உண்டாகும்.மாணவர்கள்
படிப்பு விசயமாக வெளிநாடு சென்று வர வாய்ப்பு உள்ளது.
இன்சினியரிங் , கம்யுட்டர் துறை,மற்றும் விளையாட்டுத் துறை
சார்ந்தவர்களுக்கு பரிசு பாராட்டுகள் கிடைக்கும்.
காணாமற் போன பொருட்கள் சம்பந்தமாகிய புதிய தகவல்கள்
கிடைக்கும்.வங்கிகள் மூலம் எதிர் பார்த்திருந்த கடன்கள் சிறிது தாமதமாக
கைக்கு வந்து சேரும்.பழைய சொத்து மற்றும் சில பழைய பொருட்களை விற்பனை
செய்து விட்டுப் புதிய சொத்து மற்றும் பொருட்களை வாங்குவீர்கள்.
சுப காரிய நிகழச்சிகள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை
மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி உறவுகள் பலப்
படும் காலமாகும்.பிரிந்து வாழ்ந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேரக் கூடிய
காலமாகும்.வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் பணம் பொருள் கொடுத்து
ஏமாற்றம் அடைய வேண்டாம்.
சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் பழைய சொத்துக்களை
விற்றுப் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.உத்தியோகத்தில் இட மாற்றம்
ஏற்படும்.
இராசியான எண்:-8,2
இராசியான நிறம்:-நீலம்,வெள்ளை
இராசியான திசை:-தென்மேற்கு,மேற்கு
பரிகாரம்:-சனி,திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து ஐயப்பன்
வழிபாடு,
அம்மன் வழிபாடு செய்து நீலம்,வெள்ளை ஆடைகளைத் தானம் செய்து அன்ன தானம்
செய்து வர சகல தோசமும் தீர்;;ந்து நல்ல பலன்களைச் செய்யும்!
மந்திரம்:-
1.ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!
2.ஓம் சீதப்ரபாய வித்மஹே
ஷோடச கலாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்!
என்று செபம் செய்து
வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம்
(விசாகம்4ஆம்
பாதம்,அனுசம்1,2,3,4ஆம் பாதம்,கேட்டை1,2,3,4ஆம் பாதம் முடிய)
விருச்சிகராசி அன்பர்களே வெகு காலமாக உத்தியோகம் கிடைக்க எடுத்துக்
கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.கல்வியில் சற்று கவனமுடன்
இருப்பது நல்லது.பெண்கள் விசயத்தில் எச்சரிக்கையுடன் இரா விட்டால் வீண்
பழிச் சொல்லுக்கு ஆளாக நேரும்.திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாக இன்னும்
சற்று கால தாமதம் ஏற்படலாம். கமிசன்
தொழில்,கட்டிட சம்பந்தமாகிய கல் மணல் செங்கல்,சிமிண்ட் போன்ற
வியாபாரிகள் சிவில் என்சினியரிங் துறை சார்ந்தவர்கள்,எண்ணை வியாபாரிகள்,
எரிபொருள்,நெருப்பு,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,நீர் மற்றும்
நில வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை
அடைவார்கள்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் சந்திப்பு
எற்பட்டு அவர்களால் மிகப் பெரிய ஆதாயங்களை அடைவீர்கள்.குடும்பத்தில்
காரணமற்ற விசயங்களுக்காக பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் முன்
கோபத்தை தவிர்க்கவும்.புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளைல் சில
தடைகள் ஏற்பட்டு மன உழசை;சல் உண்டாக வாய்ப்பு இருப்பதால் சற்று கால
தாமதமாத் தொழில் தொடங்குவது நன்மை ஆகும்.
இதுவரை பட்டிருந்த கஷ்டங்கள் நீங்கி மன தைரியமுடன் எடுத்த காரியத்தை
வெற்றிகரமாச் செய்து முடிப்பீர்கள்.ஆடம்பர,அலங்காரப் பொருட்கள் மற்றும்
தங்கம் வெள்ளி போன்ற நகைகள் வாங்குவதன் மூலம் புதிய கடன்களை
வாங்குவீர்கள். குடும்பத்தில் உடல் நிலையில்
ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் கால தாமதப் பட்டிருந்த அறுவை சிகிச்சைகளைச்
செய்து கொள்ளக் கூடிய காலமாகும்..நீண்ட நாட்களாக வராத கடன்
கொடுத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும்.புதிய வீடு மற்றும் வாகனங்களை
வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.
கண்களில் கவனம் தேவை
சிறப்பு பலன்கள்:- பொதுவாக இந்த
ஆண்டில் காதல் விசயத்தில் கவனம் தேவை.நீண்ட காலமாக எதிர் பார்த்து
இருந்த பணம் கை வந்து சேரும்.
இராசியான எண்:-9,4
இராசியான நிறம்:-சிகப்பு,கருப்பு
இராசியான திசை:-தெற்கு,வடமேற்கு
பரிகாரம்:- செவ்வாய்,ஞாயிற்றுக்
கிழமைகளில் விரதம் இருந்து முருகன் ஆலய வழிபாடு,பிதுர் வழிபாடு செய்து
செய்து அன்ன தானம்,சிகப்பு கருப்பு வஸ்திர தானங்களைச் செய்து வர கிரக
தோசம் தீரும்!
மந்திரம்:-
1.ஓம் சுப்ரமண்யாய வித்மஹே
மஹா சூராய தீமஹி
தந்நோ ஸ்கந்த: ப்ரசோதயாத்!
2.ஓம் பிரம்ம புத்ராய வித்மஹே
ஸைம் ஹிகேயா தீமஹி
தந்நோ ராஹீ: ப்ரசோதயாத்!
என்று ஜெபம் செய்து
வழிபாடு செய்யவும்.
தனுசு
(மூலம்1,2,3,4ஆம் பாதம்,பூராடம்1,2,3,4ஆம் பாதம்,உத்திராடம்1ஆம் பாதம்
முடிய)
தனுசுராசி
அன்பர்களே திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான விசயங்களில் தடைகள்
ஏற்படும்.தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அதனால் மருத்துவச்
செலவுகள் உண்டாகும்.பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள்
மாறிச் சொத்துக்கள் கிடைக்கக் கூடிய காலமாகும்.உத்தியோகம்
பார்ப்பவர்களுக்குப் பணி செய்யும் இடங்களில் புதிய குழப்பங்கள் வந்து
சேரும்.ஒரு சிலருக்கு இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தீராத
நோய்களுக்கு புதிய முறை மருத்துவரின் உதவியால் நோய் நீங்கும்.குடும்பச்
சொத்துக்களில் சம்பந்தம் இல்லாத புதிய மனிதர்களால் பிரச்சனைகள்
உருவாகலாம்.பிள்ளைகளால் சில தொல்லைகள் ஏற்படுவதோடு காரணமற்ற பொருட்
செலவுகளும் உண்டாகலாம்.உடல் நிலையில் நீர் மற்றும் இதய சம்பந்தமான
பிணிகள் வராதவாறு கவனிக்கவும்.காதல் விசயத்தில் பெண்களால் அவமானப்பட
நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் நல்லது.விட்டுப் போன
பழைய வழக்குகளை மீண்டும் தொடர்ந்தால் வேற்றி
பெறலாம்.ஆலயத் திருப் பணிகளுக்கான பொதுப் பணிகளில் ஈடு பட்டு நற் பெயர்
எடுப்பீர்கள். பூ,
பழம், இலை,
காய்கறிகள், உணவுப் பொருள்
வியாபாரிகள், பிரிண்டிங் தொழில்,
எழுத்தாளர்கள், நறுமணப் பொருட்களின்
வியாபாரிகள், ஏற்றுமதி இறக்குமதி தொழிற்
செய்வோர்கள் உணவுக் கூடங்கள் நடத்துபவர்கள்
ஆகியோர்களுக்கு நல்ல சிறப்பான பலன்களைத் தரக்கூடிய ஆண்டாகும்.
திடீர் அதிர்ஷ்டம் மூலம் ரேஸ்,லாட்டரி போன்றவற்றாலும் மற்றும்
வியாபாரத்தில் ஏற்படும் புதிய ஒப்பந்தங்களாலும் ஏற்பட வாய்ப்பு உள்ள
காலமாகும். மஹான்களின் தரிசனத்திற்காக நீண்ட
தூரப் பயணங்களை மேற் கொண்டு அதனால் மன நிம்மதி அடைவீர்கள்.
சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் திடீர் அதிரஷ்டத்தால்
பணம் வந்து சேரும்.குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
இராசியான எண்:-3,1
இராசியான நிறம்:-மஞ்சள்,வெள்ளை
இராசியான திசை:-வடகிழக்கு,கிழக்கு
பரிகாரம்:-
வியாழன்,ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தி
வழிபாடு,சிவ ஆலய வழிபாடு செய்து மஞ்சள், வெள்ளை ஆடைகளைத் தானம் செய்து
வர கிரக தோசம் தீர்ந்து நன்மைகளைச் செய்யும்!
மந்திரம்:-
1ஓம் தக்ஷிணா மூர்த்தயே ச வித்மஹே
த்யாநஸ்த்தாய தீமஹி
தந்நோ தீஸ: ப்ரசோதயாத்!
2.ஓம் தன்மகேசாய வித்மஹே
வாக் விசுத்யாய தீமஹி
தந்நோ சிவ: ப்ரசோதயாத்!
என்று ஜெபம் செய்து
வழிபாடு செய்யவும்.
மகரம்
(உத்திராடம்2,3,4ஆம் பாதம்,திருவோணம்1,2,3,4ஆம் பாதம்,அவிட்டம்1,2ஆம்
பாதம்)
மகரராசி அன்பர்களே உத்தியோகத் துறையினர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்
பார்த்து இருந்த நினைத்த இடங்களுக்கு இட மாற்றம் உண்டாகும்.பதவி
உயர்வும் மேலதிகாரிகளின் நட்பும் உண்டாகக் கூடும்.வேலை இல்லாதவர்களுக்கு
நண்பர்களின் உதவியால் புதிய வேலை கிடைக்கும் யாத்திரையின் போது புதிய
நபர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயம்
அடையலாம்.மாணவர்களுக்கு நினைத்த இடங்களில் கல்வியைத் தொடர வாய்ப்பு
உள்ளது.விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு பாராட்டுதல்கள்
கிடைத்தாலும் சற்று கவனமுடன் இருக்கவும். உறவினர்களின் ஆதரவால் திருமணத்
தடைகள் விலகி; திருமணம் நடக்கும்.சொத்து சம்பந்தமாகிய வழக்கு
விசயங்களில் எதிர் பார்த்து இருந்த ஜாதகமான முடிவுகள்
கிடைக்கும்.கட்டிடத் தொழிலாளர்கள், கட்டிடப்
பொருள் வியாபாரிகள்,வழக்கறிஞர்கள், சினிமா,நாடகத்துறை சார்ந்தவர்கள்,
பத்திரிக்கை நடத்துபவர்கள்,பத்திரக்கை எழுத்தாளர்கள்,சங்கீதக்
கலைஞர்கள், பாடலாசிரியர்கள்,
கதாசிரியர்கள், தஙகம் வெள்ளி போன்ற
நகை வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.
ஒரு சிலருக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.
காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரும்.
நண்பர்கள் மற்றும் உறவனர்களின் வரவால் மன மகிழ்ச்சியும்
குடும்பத்தில் அமைதியும் நிலவும்.நன்றாக ஆலோசிக்காமல் மற்றவர்களுக்கு
உதவி செய்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.புதிய வீடு,நிலம்
வாங்குவதைத் தள்ளிப் போடுதல் சிறந்ததாகும்.உடல் நிலையில் கண்,காதுகளில்
கவனமுடன் இருக்கவும். அரசியல் வாதிகளால்
எதிர் பார்த்த ஆதாயம் இல்லை. குழந்தைகள்
பரிசு மற்றும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.
சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் உத்தியோக உயர்வு
உண்டாகும்.வழக்கு விசயங்களில் ஜாதகமான முடிவுகள் கிடைக்கும்.
இராசியான எண்:-8,5
இராசியான நிறம்:-நீலம்,பச்சை
இராசியான திசை:-தென்மேற்கு,வடக்கு
பரிகாரம்:-
சனி,புதன் கிழமைகளில் விரதம் இருந்து சனீஸ்வர வழிபாடு,மஹா
விஷ்ணு வழிபாடு செய்து நீலம்,பச்சை வஸ்திரங்களைத் தானம் செய்து வர கிரக
தோசம் தீர்ந்து நற்பலன்கள் உண்டாகும்!
மந்திரம்:-
1.ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!
2.ஓம் ஆத்ரேயாய வித்மஹே
ஸோம புத்ராய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்!
என்று ஜெபம் செய்து
வழிபாடு செய்யவும்.
கும்பம்
(அவிட்டம்3,4ஆம் பாதம்,சதயம்1,2,3,4ஆம் பாதம்,பூரட்டாதி1,2,3ஆம் பாதம்
முடிய)
கும்பராசி அன்பர்களே உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த தொல்லைகள் தீர்ந்து
மன நிம்மதி அடைவீர்கள்.பங்காளிகளுடன் புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப்
போட்ட திட்டங்களில் சிறிது கால தாமதம்
ஏற்படும்.விபரீதமான எண்ணங்களினால் வீண் பிரச்சனைகளும் மன நிம்மதி
இன்மையும் ஏற்படலாம்.உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும்
பொருள் உதவிகளும் கிடைக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இட மாற்றம்
ஏற்படலாம்அலுவலகத்தில் நீண்ட நாட்களாக வர வேண்டிய பணங்கள் கைக்கு வந்து
சேரும்.சகோதர சகோதரிகளுடன் மனக் கசப்பும்,
அவர்களால் பொருள் விரையமும் வந்து சேரலாம்.வீடுகளில் கவனமுடன் இருந்தால்
திருடு போவதைத் தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் தொழிற்சாலைகளை
மாற்றி அமைக்கப் போட்டிருந்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.தந்தை
மகன் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்பட்டுப் பின் உறவுகள் பலப்டும்.கணவன்
மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.ஆடு மாடு போன்ற
வாகனஙத் தொழிற் செய்வோர்கள்,விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள்,இராசானத்தொழிற்
செய்வோர்கள்,பெட்ரோல்,டீசல் வியாபாரிகள்,நில வளத்துறை, நீர் வளத்துறை
போன்றவற்றில் பணி புரியும் அதிகாரிகள்,
மருத்துவர்கள், மருத்துவமனை நடத்துவோர்கள்
ஆகியோர்களுக்கு நற்பலன் தரும் காலமாகும்.
பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.வங்கிகளின் கூலம் எதிர் பார்த்து
இருந்த கடன் கேட்டிருந்த தொகைகள் கிடைக்கச் சற்று கால தாமதம்
ஆகலாம்.பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை
வாங்குவீர்கள்.மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களைக் கடன் கொடுத்து
ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.தந்தையின் உடல் நிலை பாதிப்பால்
மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் விட்டுப் போன உறவுகள்
மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும்.செய் தொழிலில் நல்ல லாபம்
அடைவீர்கள்.
இராசியான எண்:-7,3
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு,மஞ்சள்
இராசியான திசை:-வடமேற்கு,வடகிழக்கு
பரிகாரம்:- திங்கள்,வியாழக்
கிழமைகளில் விரதம் இருந்து கணபதி,சிவன் வழிபாடு செய்து அன்னதானம்,கருஞ்
சிகப்பு,மஞ்சள் வஸ்திர தானமும் செய்து வர
சகல கிரக தோசமும் நீங்கி நற்பலன் உண்டாகும்!
மந்திரம்:-
1.ஓம் ஜைமினி கோத்ராய வித்மஹே
தூம்ர வர்ணாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்!
2.ஓம் ஆங்கிரஸாய வித்மஹே
சுரா சார்யாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்!
என்று ஜெபம் செய்து
வழிபாடு செய்யவும்.
மீனம்
(பூரட்டாதி2,3,4ஆம் பாதம்,உத்திரட்டாதி1,2,3,4ஆம் பாதம்,,ரேவதி1,2,3,4ஆம்
பாதம் முடிய)
மீனராசி அன்பர்களே கை விட்டுப் போன பழைய தொழில்கள் மீண்டும் கை வந்து
சேரும். வெளி நாடு செல்லுதல்; போன்ற
விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும்.புதிய வீடு,
நில புலன்கள் வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.
அந்நிய நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று
வருவார்கள்.மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் இருந்தால் பரிசு மற்றும்
பாராட்டுதல்களைப் பெறலாம். கல்வி சம்பந்தமான
உதவித் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.
பிள்ளைகளால் தொல்லைகள் இருந்தாலும் அவர்களால் பாராட்டுதல் களையும் நன்
மதிப்பையும் பெறுவீர்கள். உடம்பில் வாதம்
மற்றும் வாயுத் தொல்லைகள் வந்து போகலாம்.அறுவை சிகிச்சை செய்யக்
கூடியவர்கள் வருடப் பிற்பகுதிக்குப் பிறகு செய்து கொள்வது நல்லதாகும்.
கணவன் மனைவி உறவுகளில் திடீர் மனக் கசப்புகள் ஏற்பட்டுப் பின்
நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத்
திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.விவசாயம் செய்பவர்கள் புதிய முறை
விவசாயம் செய்தல் மூலம் நல்ல லாபம் அடைவார்கள்.
பணப் புழக்கம் சுமாராகக் காணும்.வர வேண்டிய பணங்கள் கை வந்து
சேரும்.கார்,லாரி போன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர்கள்,வாகன
ஓட்டுனர்கள்,அரசியல் வாதிகள், நெருப்பு
போலீஸ்,ராணுவம் சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளவும்.
கமிசன்,தரகு,ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,ஆடம்பர அலங்காரப்
பொருள் வியாபாரிகள், ஆலயப் பணி செய்வோர்கள், நவரத்தின
வியாபாரிகள்,வங்கியில் பணி புரிபவர்கள்,
அச்சுத் தொழிற் செய்பவர்கள், சேர் மார்க்கெட் நடத்துபவர்கள் ஆகியோர்கள்
நற் பலன் அடைவார்கள்.வாகனங்களில் கவனமுடன் ஓட்டிச் செல்லுதல் நல்லது.
குல தெய்வ வழிபாடு செய்து வருவதால் வீண் பிரச்சனைகள் வராமல்
இருக்கும்.
சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் மனக் குறைகள் தீர்;;நது
ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
இராசியான எண்:-2,9
இராசியான நிறம்:-வெள்ளை,சிகப்பு
இராசியான திசை:-மேற்கு,தெற்கு
பரிகாரம்:-திங்கள்,செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து
அம்மன்,முருகள் ஆலய வழிபாடு செய்து வெள்ளை,சிகப்பு ஆடை தானம் செய்து வர
அனைத்து தோசங்களும் நீங்கி நற் பயனைச் செய்யும்!
மந்திரம்:-
1.ஓம் காத்யாயின்யாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!
2.ஓம் சுப்ரமண்யாய வித்மஹே
மஹா சூராய தீமஹி
தந்நோ ஸ்கந்த: ப்ரசோதயாத்!
என்று ஜெபம் செய்து
வழிபாடு செய்யவும்.
|