தமிழில் உங்கள் பலன்களை அறிய ஜோதிடம்.கொம்
 

முதற்பக்கம் எண் ஜோதிடம் இராசி பலன் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு
 

ஜோதிடம்

எண் ஜோதிடம்
இராசி பலன்
   
தியானம்
மந்திரம்
சித்தமருத்துவம்

2010ம் இராசிபலன்கள்
2009ம் சனிப் பெயர்ச்சி
 

Dr.P.Esakki

ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி : 0091-4633-243029

செல் : 00919842529691, 00919842510578

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்

இணையத்தளம் : www.gnanayohi.com 

பணம் அனுப்ப

NAME : P.ESAKKI

BANK : INDIAN OVERSEAS BANK

A/C No. : 9419

BRANCH :  KADAYANALLUR

DISTRICT : TIRUNELVELI

TAMILNADU

INDIA

 
 

2009ம் வருட சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி (விரோதி ஆண்டு புரட்டாசி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை மணி 3 நிமிடம் 38 க்கு) 54 நாழிகை 6 விநாடிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு உத்திரம் 2 ஆம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் கன்னியில் இருப்பார். இக்கால கட்டத்தில் 12 இராசிகளுக்கும் சனி பகவானால் ஏற்படப் போகும் பொதுவான பலாபலன் களைப் பற்றிப் பார்ப்போம்.(வாக்கயப் பஞ்சாங்கப்படி)

12 இராசிக்காரர்களும் செபம் செய்ய சனி பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!

சனீஸ்வர ஸ்துதி!
முனிவர்கள் தேவர்கள் ஏழுலக மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லாது உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர் சேயே காகமேறும் சனி பகவானே
உனைத் துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!

மேசம்: (அசுபதி 1,2,3,4ம் பாதம், பரணி 1,2,3,4ம் பாதம், கார்த்திகை 1ம் பாதம் முடிய)
மேசராசி அன்பர்களே தங்களது இராசிக்குப் 10,11 க்கு ஆதிபத்தியம் பெற்ற பாதகாதிபதி ஆகிய சனி ஜென்ம ராசிக்கு 6ம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆவதால் செய் தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு நல்ல லாபம் பெறப் போகும் காலமாகும். குடும்பத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பண நெருக்கடிகள் மாறி மிகவும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வேண்டாத விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டுப் வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாதிருங்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான நீண்டகால முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சகோதர சகோதரிகளின் விட்டுப் போன திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறும் காலமாகும். இரும்பு இயந்திரம், இரசாயனம், பழைய பொருட்கள், மீன் முட்டை, மாமிச உணவுகளின் வியாபாரிகள், பலசரக்கு மற்றும் பெட்ரோல், டீசல்,மண் எண்ணை போன்ற எண்ணை வியாபாரிகள், கமிசன் தொழிற் செய்வோர்கள், அச்சுத் தொழிற் செய்வதற்கான உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைவீர்கள். தாயின் உடல் நிலை பாதிப்புகளின் மூலம் அநாவசியமாக மருத்துவச் செலவுகள் வந்து போகும். காதல் விசயத்தில் எதிர் பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும் காலமாகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றங்களைச் செய்வதன் மூலமான பிரச்சனைகள் குறைந்து நிம்மதி ஏற்படலாம். பிள்ளைகளை சற்று எச்சரிக்கையுடன் கவனித்துக் கொள்ளவும். வீடு மற்றும் வாகனங்களை பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சி தங்களுக்கு மன நிம்மதியோடு செல்வாக்கு புகழ் பெற்றுத் தரக் கூடிய காலமாகும்.

ரிசபம்:
(கார்திகை 2,3,4 ம்பாதம், ரோகிணி 1,2,3,4 ம் பாதம், மிருகசீரிடம் 1,2 ம் பாதம் முடிய)
ரிசபராசி அன்பர்களே தங்களது இராசிக்கு 9,10 க்கு ஆதி பத்தியம் பெற்றுள்ள கேந்திர திரிகோணாதிபதி ஆகிய சனி பகவான் ஜென்ம ராசிககு 5 ஆம் இடத்தில் திரிகோணம் பெற்று சஞ்சாரம் செய்வதால் நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த விசயங்களில் நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.உற்றார் மற்றும் உறவினர்களினால் பொருட் செலவுகளும் நிம்மதி இன்மையும் ஏற்படும்.மாணவர்கள் தங்களது கல்வித் துறையில் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்களைப் பெறக் கூடிய காலமாகும்.விட்டுப் போன பழைய உறவுகளுடன் திரும்பவும் சேர்ந்து வாழ வாய்ப்புகள் உள்ளது.தீராத நாட் பட்ட வியாதிகள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவதன் மூலம் நோய் நீங்குவதற்கான காலமாகும். கட்டிட சம்பந்தமான கல் மணல் செங்கல் சிமிண்ட ஆகியன விற்பனை மற்றும் உற்பத்தி செய்வோர்கள், அழகு கலைக் கூடங்களை நடத்துவோர்கள், சினிமா,நாடகத் துறை சார்ந்தவர்கள்,கலைக் கல்லூரிப்: பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,நவ ரத்தின வியாபாரிகள்,பூமி நில புலன்கள் சம்பந்தமான வியாபாரிகள்,நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், சேர் மார்க்கெட் நடத்துவோர்கள்,அழகுசாதனப் பொருட்களின் வியாபாரிகள், சிற்பத் தொழிற் செய்வோர்கள்,கார்,லாரி ஆடு மாடுகள் போன்ற வற்றை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவீர்கள். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இரந்த பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும்.உடல் நிலையில் வாயு மற்றும் வாத சம்பந்தமான பீடைகளும்,வலி போன்ற உபாதைகளும் வந்து போகும்.வேளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் அந்நிய மதத்தவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.மஹான்களின் தரிசுனங்களின் மூலம் மன நிறைவு அடைவீர்கள்.யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்க.

மிதுனம்:
(மிருகசீரிடம்3,4ஆம் பாதம்,திருவாதிரை1,2,3,4ஆம் பாதம், புனர் பூசம்1,2,3ஆம் பாதம் முடிய)
மிதுனராசி அன்பர்களே தங்களது இராசிக்கு8,9 க்கு ஆதி பத்தியம் பெற்றுஉள்ள சனி பகவான் ராசிக்கு 4ம் இடத்தில் கேந்திரம் பெற்று சூரியனுடன் கூடிச் செவ்வாயின்பார்வையைப் பெறுவதால் செய் தொழிலில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லதாகும்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடுதல் உகந்ததாகும்.வேண்டாத விசயங்களில் தலையிடுவதையும்,பிறருக்காக சொத்து மற்றும் வழக்கு சம்பந்தமான விசயங்களுக்கு ஜாமீன் போடுவதையும் தவிர்க்கவும்.தாயின் உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் அதனால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் கிடைப்பதற்காக முயற்சித்து மேலும் பொருட் செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.உற்றார் மற்றும் உறவினர்களின் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள். உத்தியோகம் பாரப்பவர்கள் தங்களது மேலதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்றுப் புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். உடல் நிலையில் எலும்பு நரம்பு போன்ற உபாதைகள் வந்து சேரக் கூடிய காலமாகும். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதிலும் மேலும் பொதுப் பணி சம்பந்தமான விசயங்களில் ஈடு படுவதன் மூலம் நற் பெயர் ஏற்படலாம்.காணாமற் போன பாருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேருவதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட விசயங்களில் பணம் வந்து சேரலாம்.பூ பழம் மற்றும் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களை நடத்துவோர்கள்,கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள், இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள்,கோவிற் பணி செய்வோர்கள்,இணைய தளங்களை நடத்துவோர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.

கடகம்:
(புனர்பூசம்4ஆம் பாதம்,பூசம்1,2,3,4ஆம்பாதம்,ஆயில்யம்1,2,3,4ஆம்பாதம் முடிய) கடகராசி அன்பர்களே தங்களது இராசிக்கு 7,8க்கு உடைய மாரகாதிபதி சனி ஜென்ம ராசிக்கு 3ஆம் இடத்தில் மறைந்து இருப்பதால் கணவன் மனைவியின் உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சிலகாலம் நீடிக்கும்.நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.ஏற்கனவே நட்த்திக் கொண்டு இருக்கும் தொழில்களில் கூட்டாளிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் வந்து சேரலாம்.குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் சொத்துக்கள் சம்பந்தமாக சிற்சில மனக்
கசப்புகள் வந்து நீங்கும்.விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாராட்டுக்களும் பரிசுகளும் பெறுவார்கள்.காதல் சம்பந்தமான விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களால் பிரச்சனைகள் வந்து சேரலாம். புதிய வீடு நிலம் வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பணம் கைக்கு வந்து சேரும் காலமாகும்.அண்டை அயல் வீட்டுக் காரர்களுடன் காரணமற்ற பிரச்சனைகள் வர இருப்பதால் முன்கோபத்தை தவிர்த்தல் நல்லது.விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல லாபம் அடைவார்கள். தந்தை மகன் உறவுகளில் மனக் கசப்புகள் வந்து அதனால் இட மாற்றம் செய்வதற்கான திட்டங்களைப் போடுவீர்கள்.கோர்ட் சம்பந்தமான நாட் பட்ட வழக்கு விசயங்களில் நண்பர் களின் உதவிகளால் சாதகமான முடீவுகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. காய்கரிகள் இலை,கீரை,மூலிகை சம்பந்தமான பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வோர்கள்,அச்சுத் தொழில் செய்வோர்கள், தபால் தந்தித்துறை சார்ந்தவர்கள்,கவிஞர்கள், எழுத்தாளர்கள்,நோட்டு பேனா பென்சில் போன்ற ஸ்டே~னரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.

சிம்மம்:
(மகம்1,2,3,4ஆம் பாதம்,பூரம்1,2,3,4ஆம் பாதம்,உத்திரம்1ஆம் பாதம் முடிய)
சிம்மராசி அன்பர்களே தங்களது ராசிக்கு 6,7 க்கு உடைய மாரகாதிபதி சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் காதல் சம்பந்தமான விசயங்களில் பெண்களால் அவமானமான சூழ் நிலைகள் வர இருப்தால் மிகுந்த கவன
முடன் பேசிப் பழகுதல் நல்லது. உற்றார் மற்றும் உறவினர்களால் பொருட் செலவுகள் வருவதோடு சில ஆதாயங்களையும் பெறுவீர்கள்.நீண்ட காலமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பக் கூடிய காலமாகும்.வராத கடன் கொடுத்து இருந்துள்ள பணம் மற்றும் பொருட்கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். மீன் முட்டை மாமிசம் சம்பந்தமான உணவு பொருட்களின் வியாபாரிகள்,அழுகல் பொருட்களாகிய காய்கரிகள்,கீரை போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்,கழிவு பொருட்கள்,பழைய பேப்பர் மற்றும் பிளா~;டிக் சம்பந்தமான பொருட்கள் ஆகியன வாங்குவோர் விற்போர்கள்,அணு ஆராய்ச்சித் துறையினை சார்ந்தவர்கள்,விஞ்ஞானிகள், இரசாயன சம்பந்தமாகிய தொழிற் செய்வோர்கள்,சுத்திகரிப்புத் துறை சார்ந்தவர்கள்,அரசுத் தூதுவர்கள்,விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர்கள் நல்ல லாபங்களை அடைவார்கள்.வட்டித் தொழில் மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.
மற்றவர்களின் சொத்து சம்பந்தமான விசயங்களுக்காக தலை யிட்டு சாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.கல தெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவை அடைவீர்கள்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் சந்திப்புக்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளவீர்கள்.குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.உடல் நிலையில் உ~;ணம் மற்றும் சுரம் போன்ற வியாதிகள் வந்த போகும் காலமாகும். பொதுத் துறையைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார செருக்கடிகள் தீருவதற்காகப் பூர்வீகச் சொத்துக்கள் சிலவற்றை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும். உல்லாசப் பயணங்களில் குழந்தைகளை மிக கவனமுடன் பார்த்துக் கொள்ளுதல் சிறந்ததாகும்.தென் திசையில் இருந்து பெண்களால் சில ஆதாயங்கள் வந்து சேரும் காலமாகும்.

கன்னி:
(உத்திரம்2,3,4ஆம்பாதம்,ஹஸ்தம்1,2,3,4ஆம்பாதம்,சித்திரை1,2ஆம்பாதம்முடிய)
கன்னிராசி அன்பர்களே தங்களது இராசிக்கு5,6 க்கு ஆதி பத்தியம் பெற்றுள்ள சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பூர்வீகச் சொத்துக்களால் சிற் சில பிரச்சனைகள் வந்து சேருவதோடு உறவினர்களுடன் மனக் கசப்புகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.தூர தேச தீர்த்த யாத்திரைகளை சென்று வருவதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பிள்ளைகளுக்கு உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மருத்துவச் செலவு
கள் வந்து சேரும்.செய் தொழிலில் பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்களை ஆரம்
பம் செய்யப் போகும் காலமாகும்.பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்றுப் புதிய வீடுகள் வாகனங்கள் வாங்குவீர்கள்.குடும்பத்தில் சுபகாரிய செலவுகளுக்காக நண்பர்கள் மூலமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். காணாமற் போன பொருட்களை தேடி பொருட்செலவுகளைச் செய்வீர்கள். சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் தலையிட்டு நற் பெயர் புகழ் அடையக் கூடிய காலமாகும்.நெருப்பு சம்பந்தமான கேஸ்,வெல்டிங் போன்ற தொழிற் செய்வோர்கள்,நிலக்கரி,விறகு போன்ற வியாபாரிகள், காவல் துறை இராணுவம் தீயணைப்பு போன்ற துறை சார்ந்தவர்கள்,காரமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,புதிய நில புலன்களை வாங்கி விற்போர்கள்,மின்சாரத் துறை சார்ந்த பணியாளர்கள்,மின் சாதனப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்னையாளர்கள் ஆகியோர்கள் மிகவும் நல்ல பலன்களை அடைவார்கள். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும். அரசியல் வாதிகளிடம் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதத்தின் மேல் காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.தொழிற் சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றி அமைப்பதற்கான பணிகளில் மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.பொது சேவைகளைச் செய்வோர்கள் மீது வீண் பழிச் சொல் வரஇருப்பதால் மிகவும் கவனமுடன் பணி ஆற்றுவது நல்லது.யாத்திரையின் போதுகுழந்தைகளை மிக எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும்.திடீர் அதிர்~;டம் மூலமாகப் பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும் காலமாகும்.

துலாம்:
(சித்திரை3,4ஆம்பாதம்,சுவாதி1,2,3,4ஆம் பாதம்,விசாகம்1,2,3ஆம் பாதம் முடிய)
துலாம்ராசி அன்பர்களே தங்களது இராசிக்கு 4,5 க்கு உடைய கேந்திர கோணாதிபதி ஆகிய சனி பகவான் ராசிக்குப் 12 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் எதிர் பார்த்து இருந்த வெற்றிகள் கிடைக்கும்.அந்நிய நாட்டுத் தொடர்புகள் உடையவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலமாகப் பொருளாதார நெருக்கடிகளை மாற்றிக்கொள்ளுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் தங்களது மேலதிகாரிகளிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.அரசு சம்பந்தமான நாட் பட்ட வழக்கு விசயங்கள் நல்ல தொரு முடிவுக்கு வந்து மன நிம்மதியை அடைவீர்கள்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு வந்து திரும்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காக வெகு தூரங்களுக்கு தீர்த்த யாத்திரைகளை மேற் கொள்ளுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.புதிய ஆடை மற்றும் அணி கலன்களை வாங்குவீர்கள்.தண்ணீர்,கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,கடல் வளத் துறை சார்ந்தவர்கள்,உப்பு உர வியாபாரிகள்,பூஜைப் பொருட்களின் விற்பனையாளர்கள்,தாய் சேய் நல விடுதிகள் மற்றும் அநாதை ஆசிரமங்களை நடத்து பவர்கள்,நவ ரத்தின வியாபாரிகள்,மருந்து உற்பத்தியாளர்கள்,மருத்துவ மனைகளை நடத்துபவர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரிசி போன்ற உணவு தானிய வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லதாகும்.வேற்று மதத்தவர்களால் எதிர் பார்த்த ஆதாயம் இல்லை. செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் ஏற்பட்டு காவல் துறையினர்களால் எச்சரிக்க பட இருப்பதால் எந்த விசயத்திலும் கவனமுடன் செயல் படவும்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதியும் மற்றும் பெரிய மனிதர்களின் தொடர்புகளும் ஏற்படும் காலமாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபடுவதன் மூலம் பெயர் புகழ் ஏற்படும்
மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனமுடன்பயின்று வரவும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

விருச்சிகம் :
(விசாகம்4ஆம்பாதம்,அனுசம்1,2,3,4ஆம்பாதம்,கேட்டை1,2,3,4ஆம்பாதம்முடிய)
விருச்சிகராகி அன்பர்களே தங்களது இராசிக்கு 3,4 க்கு ஆதிபத்தியம் பெற்றுள்ள சனி பகவான் ஜென்ம ராசிக்கு 11ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகி சஞ்சரிப்பதால் இதுவரையில் தாங்கள் பட்டு வந்த இன்னல்கள் நீங்கி; அமோகமான பணம் மற்றும் பெயர் புகழ் அடையப் போகும் காலமாகும்.தொழில் இல்லாதவர்களுக்குப் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டு வெற்றி பெறுவீர்கள்.வெகு காலமாகக் காணாமற் போன நபர்கள் மற்றும் பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும் காலமாகும்.உற்றார் மற்றும் உறவினர்கள் ஆதரவுகள் மூலமாகத் தடை பட்டு வந்த திரு
மணம் போன்ற சுப காரியங்கள் நடை பெறக் கூடிய காலமாகும்.வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பி வீடு வந்து சேரும் காலமாகும்.அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைக்கும்.செய்யாத குற்றங்களுக்கு வீண் பழிச் சொல் வந்து நீங்கலாம்.உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.இரசாயனம், பழையஇரும்பு,பழைய பேப்பர்,
பிளா~;டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சித் துறையை சார்ந்தவர்கள்,மத போதகர்கள்,அந்நிய நாட்டுத் தூதுவர்கள்,விஞ்ஞானத் துறை சார்ந்தவர்
கள்,துப்புரவுத் தொழிலாளர்கள்,கயிறு வியாபாரிகள்,பொதுப் பணித் துறையைச் சார்ந்தவர்கள்,ரேஸ் லாட்டரி போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.சேர் மார்க்கெட்டில் ஈடு படுபவர்கள் மிகக்கவனமுடன் இருப்பது நல்லதாகும்.பழுது பட்ட பழமையான ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் தலையிட்டு நற்பெயர் புகழ் அடைவீர்கள்.தந்தை மகன் உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் தொகைகள் கிடைக்கும் காலமாகும்.நீண்ட காலமாக கருத்து வேறபாடுகளுடன் பிரிந்து இருந்த கணவன் மனைவி இருவரும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. மறைமுகமான எதிரிகளினால் சிற் சில தொல்லைகள் வந்து போகும்.பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சி தங்கள் வாழ்வில் மிகவும் நன்மைகளை செய்யப் போகும் பொற் காலம் ஆகும்.

தனுசு:
(மூலம்1,2,3,4ஆம் பாதம்,பூராடம்1,2,3,4ஆம் பாதம்,உத்திராடம்1ஆம் பாதம் முடிய) தனுசுராசி அன்பர்களே தங்களது இராசிக்கு 2,3 க்கு ஆதிபத்தியம் பெற்றுள்ள சனி பஹவான் ஜென்ம ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி உறவுகளில் வெகு காலமாக இருந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.வெளி நாட்டில் இருந்து எதிர் பார்த்த பணம் கிடைப்பதற்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.நாட் பட்ட பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமா
கும்.வெளி நாடு செல்லுதல் போன்ற விசயங்களுக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்கக் கூடிய காலமாகும். கட்டிட சம்பந்தமான கல் மணல் செங்கல் சிமிண்ட ஆகியன விற்பனை மற்றும் உற்பத்தி செய்வோர்கள்,அழகு கலைக் கூடங்களை நடத்துவோர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,நவ ரத்தின வியாபாரிகள்,பூமி நில புலன்கள் சம்பந்தமான வியாபாரிகள்,நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், சேர் மார்க்கெட் நடத்துவோர்கள்,
அழகுசாதனப் பொருட்களின் வியாபாரிகள், சிற்பத் தொழிற் செய்வோர்கள், சினிமா,நாடகத் துறை சார்ந்தவர்கள்,கலைக் கல்லூரிப்: பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,கார்,லாரி ஆடு மாடுகள் போன்ற வற்றை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவீர்கள்.பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும்.ஒரு சிலருக்கு பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களுக்கு வீண் பிரச்சனைகள் வருவதோடு பரிசு மற்றும் பாராட்டுக்களும் கிடைக்கும்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள்.நண்பர்கள் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக நீண்ட தூர பயணங்களை மேற் கொண்டு மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது.வீடு மற்றும் வாகனங்களை மாற்றுவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏறபடலாம்.உடல் நிரையில் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும் காலமாகும்.ரேஸ் லாட்டரி மூலமாகத் தனம் வந்து சேரலாம்.ஏற்றுமதி இறக்குமதி தொழிற் செய்வோர்கள் அந்நிய நாட்டுப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்:
(உத்திராடம்2,3,4ஆம்பாதம்,திருவோணம்1,2,3,4ஆம்பாதம்,அவிட்டம்1,2ஆம்பாதம் முடிய)மகரராசி அன்பர்களே தங்களது இராசிக்கு 1,2 க்கு ஆதி பத்தியம் பெற்றுள்ள சனி ஜென்ம ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் தந்தை மகன் உறவுகளில் சிற் சில கருத்து வேறுபாடுகள் வந்து தீரும்.பூர்வீகச் சொத்துக்களில் மற்றவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு வழக்கு மன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. குத்தகை, ஏஜன்சி,காண்டிராக்கட் போன்ற தொழில்களை நடத்துபவர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லதாகும்.வர வேண்டிய பணம் கிடைப்பதில் இன்னும் சற்று கால தாமதம் ஏற்படலாம்.செய்யாத குற்றங்களுக்காக ஏற்பட்ட அவப் பெயர்கள் நீங்குவதற்காக காவல் துறையினரின் உதவிகளை நாடுவதன் மூலமாகப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.விடு பட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமாகும். திடீர் அதிர்~;டம் மூலமாக ஒரு சிலருக்குப் பணம் மற்றும் பொருட்கள் கிடைக்கலாம். இந்நிய மதத்தவர்களிடம் இருந்து எதிர் பாராத சில ஆதாயம் கை வந்து சேரும் காலமாகும்.வங்கிப் பணி செய்பவர்கள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்களுக்குப் பணி இட மாற்றம் ஏற்படலாம்.அரசுத் துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள்,நெருப்பு சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,உணவு விடுதிகளை நடத்துபவர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,மருந்து உற்பத்தியாளர்கள்,மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள், மந்திரிப் பதவி வகிப்பவர்கள், முதியோர்களின் இல்லங்களை நடத்துபவர்கள்,விசைத்தறி ஆலையாளர்கள்,அருசுத் துறை சார்ந்த தூதுவர்கள்,புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்களை நடத்துவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் முன் கோபத்தைத் தவிர்த்து மிக எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புக்களைத் தேடி வெகுதூரங்களுக்கு யாத்திரைகளை மேற் கொள்ளுவதன் மூலமாக வேலை வாய்ப்புகள் வந்துசேரும் காலமாகும். கார் லாரி போன்ற வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்துவரவும்.பிள்ளைகளால் சிற் சில தொல்லைகள் ஏற்பட்ட போதிலும் அவர்களால் பெயர் புகழ்அடைவீர்கள். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களும் பரிசு மற்றும் பாராட்டுக்களும் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.

கும்பம்:
(அவிட்டம்3,4ஆம்பாதம்,சதயம்1,2,3,4ஆம்பாதம்,பூரட்டாதி1,2,3ஆம் பாதம் முடிய)
கும்பராசி அன்பர்களே தங்களது இராசிக்கு 1,12 க்கு ஆதி பத்தியம் பெற்றுள்ள சனி பகவான் ஜென்ம ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் பிற மதத்தவர்களுடன் காரணமற்ற பகை உணர்வுகள் மற்றும் பிரச்சனைகள் வந்து சேரலாம்.
வீண் பிர்ச்சனைகளில் தலையிட்டு எதிர் பாராத வழக்குகளில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம்.குழந்தைகளின் மனம் மகிழச்சிகளுக்காக பொருட் செலவு
கள் வந்து சேரும் காலமாகும்.இரும்பு மற்றும் பழைய பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் திருட்டுப் பொருட்களை அறியாமல் வாங்குவதன் மூலமாகப் பிரச்சினைகள் வர இருப்பதால் மிக எச்சரஜக்கையுடன் இருக்கவும்.உடம்பில் வாயு மற்றும் வாதம் வலி போன்ற தொல்லைகள் வந்து மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பெண்களால் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகி அவமானம் அவ கீர்திகள் வந்து சேர இருப்பதால் எச்சரிக்கையுடன் மற்றவர்களுடன் பேசிப் பழகுதல் நல்லது.யாத்திரைகளின் போது மற்றவர்களுடன் பிரச்சனைகளும் மற்றும் கொண்டு சென்ற பொருட்களை வாகனங்களில் மறதியில் விட்டு விடவும் செய்வீர்கள்.விவசாயம் செய்பவர்கள் புதிய முறை விவசாயங்களை மிகுந்த ஆலோசனையுடன் யோசித்து செய்யவும்.ரேஸ்,லாட்டரிகள் போன்ற சூதாட்டங்களின் மூலமாகப் பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் இருக்கவும். உடல் நிலையில் கால்களில் சில பிரச்சனைகள் வர இருப்பதால் மிக கவனமுடன் இருப்பது நல்லதாகும். உற்றார் மற்றும் உறவினர்களால் சில ஆதாயங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அவர்களால் மன நிம்மதி இன்மையும், பொருட் செலவுகளும் வந்து போகும். பிறருக்காகச் ஜாமீன் போடுவதால் மன உழழைச்சல் வந்து சேர இருப்பதால் கவனம் தேவை.வேதம் ஓதுபவர்கள்,மதத்தலைவர்கள்,ஆசிரமங்களை நடத்துபவர்கள், மடாதிபதிகள், பூ,பழம்,நறுமணப் பொருட்கள்,ப+ஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள்,கோவிலில் பணி புரிபவர்கள்,மணிகளால் ஆன மாலைகளின் வியாபாரிகள்,ரத்தின வியாபாரிகள்,தீர்த்த யாத்திரை நீறுவனங்களi நடத்துபவர்கள்,தியானப் பயிற்சி மையங்களை நடத்துபவர்கள்,
கம்யுட்டர் தொழிற் செய்பவர்கள்,தங்க நகை வியாபாரிகள்,மந்திரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடையும் காலமாகும்.வட்டுப் போன கணவன் மனைவியின் உறவுகளுக்குள் புதிய மன மாற்றங்கள் ஏற்பட்டு ஒன்று சேருவதற்கான வாயப்புகள் உள்ளது.

மீனம்:
(பூரட்டாதி4ஆம்பாதம்,உத்திரட்டாதி1,2,3,4ஆம்பாதம்,,ரேவதி1,2,3,4ஆம்பாதம்முடிய)
மீனராசி அன்பர்களே தங்களது இராசிக்கு 11,12 க்கு அதிபத்தியம் பெற்றுள்ள சனி பகவான் ஜென்ம ராசிக்கு 7 ஆம் இடமாகிய மாரக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் விட்டுப் போன பழைய கடன்கள் மற்றும் வழக்குகள் மீண்டும் தொல்லை தரலாம்.வெளி நாடுகளில்; வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.கணவன் மனைவி இடையே காரணமற்ற பிரச்சனைகளும் கருத்து வேறு பாடு
களும் வந்து போகும்.வங்கிகளில் பணி ஆற்றுபவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி இட மாற்றங்கள் ஏறபடக் கூடிய காலமாகும். இரும்பு,இயந்திரம், இரசாயனம், பழைய இரும்பு, பழைய பேப்பர்,பிளா~;டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சித் துறையை சார்ந்தவர்கள்,மத போதகர்கள்,அந்நிய நாட்டு தூதுவர்கள்,பொதுப் பணித் துறையைச் சார்ந்தவர்கள்,பல சரக்கு வியாபாரிகள்,பெட்ரோல்,டீசல்,மண் எண்ணை போன்ற வியாபாரிகள்,அடிமை ஆட்களை வைத்து வேலை செய்வோர்கள்,மீன்,முட்டை மாமிசம் போன்ற உணவுப் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அழுகல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,ஹோட்டல் பணி செய்பவர்கள்,உற வியாபாரிகள்,விவசாயப் பணி செய்பவர்கள்,வட்டித் தொழிற் செய்வோர்கள்,ரேஸ் லாட்டரி போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக மன நிறைவை அடைவீர்கள்.
புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதையும்,புதிய கடன் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.தீர்த்த யாத்திரைகளை மேற் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். காணாமற் போன பொருட்களைத் தேடிப் பொருட்களைச் செலவு செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயங்கள் ஏற்படுவதில் கால தாமதம் ஆகலாம்.வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பணம் வந்து சேரும்.பழைய இடங்களை விட்டுப் புதிய இடங்களுக்கு மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.தாய் வழிச் சொந்த பந்தங்களால் சில ஆதாயங்கள் வரக் கூடும்.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில்களைச் செய்வதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்படலாம்.யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகவும் கவனமுடன் பயணம் செய்து வரவும்.உத்தியோகம் பார்பவர்களுக்கு நினைத்த இடங்களுக்கு பணி இட மாற்ம் ஏற்படலாம்.

சுபம்!


 

 

இணையத்தள உரிமை ஜோதிடம்.கொம் 2007 - 2009