தமிழில் உங்கள் பலன்களை அறிய ஜோதிடம்.கொம்
 

முதற்பக்கம் எண் ஜோதிடம் இராசி பலன் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு
 

ஜோதிடம்

எண் ஜோதிடம்
இராசி பலன்
   
தியானம்
மந்திரம்
சித்தமருத்துவம்

2011ம் இராசிபலன்கள்
 

 

Dr.P.Esakki

ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி : 0091-4633-243029

செல் : 00919842529691, 00919842510578

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்

இணையத்தளம் : www.gnanayohi.com 

பணம் அனுப்ப

NAME : P.ESAKKI

BANK : INDIAN OVERSEAS BANK

A/C No. : 9419

BRANCH :  KADAYANALLUR

DISTRICT : TIRUNELVELI

TAMILNADU

INDIA

 
 

2011 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)2012ஆம் வருட புத்தாண்டு பொதுப் பலன்கள்

1.மேசம்:-மேசராசி அன்பர்களே 2012ஆம் வருட இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசியாகிய மேசத்தில் வியாழனும்,2ல் கேதுவும்,5ல் செவ்வாயும்,7ல் சனியும்,8ஆம் இடமாகிய விருச்சிகத்தில் ராகுவும் புதனும்,9ல் சூரியனும்,10ல் சுக்கிரனும்,12ல் சந்திரனும் இருப்பதால் குல தெய்வ ஆலயத் தீருப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் மன நிறைவு அடைவீர்கள்.விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருளாதாரச் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல பலன்களைப் பெறக் கூடிய ஆண்டாகும்.பழைய கடன்கள் மீண்டும் தொல்லைகள் தர இருப்பதால் மிக கவனமுடன் இருப்பது நல்லதாகும்.சமுதாய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் பெயர் புகழ் ஏற்பட்டு அதனால் மன மகிழ்ச்சி அடையும் காலமாகும். வெகு காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்களைத் திரும்பக் பெறுவதற்கான காலமாகும்.பூஜைப் பொருட்கள், நீர்வளத் துறை சார்ந்தவர்கள்,தண்ணீர் மற்றும் திரவ சம்பந்தமான வியாபாரிகள்,ஆலயப் பணி செய்வோர்கள்,கடல் வளத்துறை சார்ந்தவர்கள்,உப்பு மற்றும் உர வியாபாரிகள்,சாம்பிராணி கற்பூரம் ஊதுபத்தி சந்தணம் போன்ற பொருட்களின் வியாபாரிகள்,ஏலம் இலவங்கம் போன்ற வாசனாதிப் பொருட்களின் வியாபாரிகள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களுடன் நல்ல மதிப் பெண்களையும் பெறுவார்கள்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது.மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்..ஒரு சிலருக்கு ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விசயங்களின் மூலமாகத் தன வரவுகள் உண்டாகும்.விசா சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சில பெரிய மனிதர்களின் உதவிகளின் மூலம் தீர்வு காண்பீர்கள்.அரசியல் வாதிகளிடம் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். குடும்பத்தில் மன அமைதியுடன் சந்தோசம் நிலவும் காலமாகும்.வெகு காலமாக வங்கிகளில் எதிர் பார்த்து இருந்து வந்த பண உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.பங்காளிகளுடன் செய் தொழில் விசயங்களில் சற்று பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது

சிறப்பு பலன்கள்:-வங்கிகளிடம் இருந்து வெகு காலமாக எதிர் பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்தரகு கமிசன் போன்ற தொழிற் செய்பவர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும் சிறப்பான ஆண்டாகும்.

இராசியான எண்:-3,2
இராசியான நிறம்:-மஞ்சள்,வெள்ளை
இராசியான திசை:-வடகிழக்கு,மேற்கு

பரிகாரம்:-வியாழக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தி வழிபாடு,அம்மன் ஆலய வழிபாடு செய்து மஞ்சள், வெள்ளை ஆடைகளைத் தானம் செய்து வர கிரக தோசம் தீர்ந்து நன்மைகளைச் செய்யும்!

மந்திரம்:-1ஓம் தக்ஷிணா மூர்த்தயே ச வித்மஹே
த்யாநஸ்த்தாய தீமஹி
தந்நோ தீஸ: ப்ரசோதயாத்!

2.ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!--என்று மந்திரம் சொல்லி வழிபாடு செய்து வரவும்.

2.ரிசபம் ரிசபராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசியாகிய ரிசபத்திற்கு 1ல் கேதுவும்,4ல் செவ்வாயும்,6ஆம் இடமாகிய துலாத்தில் சனியும்,7ல் ராகுவும் புதனும்,8ல் சூரியனும்,9ல் சுக்கிரனும்,11ல் சந்திரனும்,12ல் வியாழனும் அமர்ந்து இருப்பதால் கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் வர இருப்பதால் கவனமுடன் இருக்கவும்.உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். நண்பர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும்.யாத்திரையில் பெரிய மனிதர்கள்,அரசியல் வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் சந்திப்புக்களால் நன்மை அடைவீர்கள்.உடல் நிலையில் கண் காதுகளில் கவனமுடன் இருந்து வரவும்.தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதியை அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் பிற மதத்தவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.குடும்பத்தில் வெகு காலமாகத் தடை பட்டு வந்துள்ள சுப காரியங்கள் நண்பர்களின் உதவியால் தடை நீங்கி இனிது நடைபெற வாய்ப்பு உள்ள மிகச் சிறந்த ஆண்டாகும். காய்கரிகள் இலை ,ப10போன்ற பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள்அரசுத்துறை சார்ந்த வழக்கறிஞர்கள்,இரும்பு இயந்திரப் பொருட்களை விற்பனை செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,விஞ்ஞானத் துறைகளைச் சார்ந்தவர்கள்,பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,மடாதிபதிகள்,துப்புரவுப் பணிகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். புதிய தொழில்கள் ஆரம்பம் செய்வதில் சில சிரமங்களைச் சந்தித்துப் பின் தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது.ஒரு சில கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சில காலம் நீடிக்கும்.காரணமற்ற முன் கோபத்தை தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகள் குறையும்.ஹோட்டலில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மிகவும் கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லதாகும்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்குத் தங்களது கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கக் கூடிய காலமாகும்.நீண்ட காலமாகப் பிரிந்து போன உறவுகளுடன் திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.பொது நலத் தொண்டுகளில் ஈடு படுவோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.குழந்தைகின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை சென்று வருவீர்கள்.

சிறப்பு பலன்கள்:-வேண்டாத விசயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
பிள்ளைகளால் எதிர் பாராத ஆதாயமும்,பொருள் வரவும்,பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்கக் கூடிய காலமாகும்.

இராசியான எண்:-3,8
இராசியான நிறம்:-மஞ்சள்,நீலம்
இராசியான திசை:-வடகிழக்கு,தென்மேற்கு

பரிகாரம்:-வியாழன்,சனிக் கிழமைகளில் விரதம் இருந்து சிவ வழிபாடு மற்றும் சனீஸ்வர வழிபாடு செய்து மஞ்சள்,நீல நிற வஸ்திரங்களைத் தானம் செய்து வர சகல கிரக தோசங்களும் நீங்கி நன்மை தரும்!

மந்திரம்:-1ஓம் தக்ஷிணா மூர்த்தயே ச வித்மஹே
த்யாநஸ்த்தாய தீமஹி
தந்நோ தீஸ: ப்ரசோதயாத்!

2.ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்!---என்று மந்திரம் சொல்லி வழிபட்டு வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசி ஆகிய மிதுனத்திற்கு 3ல் செவ்வாயும்,5ல் சனியும்,6ல் ராகுவும் புதனும்,7ஆம் இடமாகிய தனுசில் சூரியனும்,8ஆம் இடத்தில் சுக்கிரனும்,10ஆம் இடத்தில் சந்திரனும்,12ல் கேதுவும் அமர்ந்து இருப்பதால் வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும்.பொருளாதாரத்தில் இது நாள் வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறி பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.வெளி நாடுகள் சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுப்பதை மிகவும் ஆலோசித்து செய்யவும். ஜவுளி நூல் வியாபாரிகள்,நோட்டு புத்தகம் போன்ற ஸ்டேசனரி பொருட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி செய்வோர்கள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்,எழுத்துப் பணி ஆற்றுபவர்கள,மருந்துப் பொருட்களின் வியாபாரிகள்,மருத்துவத் துறை சார்ந்த அறிஞர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,தண்ணீர் மற்றும் கூல்டிரிங்ஸ் போன்ற திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அரிசி மற்றும் உணவு தானியங்களின் வியாபாரிகள்,பூஜை சம்பந்தமான பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள்,கப்பல் படை சார்ந்தவர்கள்,கடல் வளத்துறை சார்ந்த விஞ்ஞானிகள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,கவிஞர்கள் எழுத்தாளர்கள்
,பாடலாசிரியர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதி அடையும் காலமாகும். யாத்திரயின் போது மிகுந்த கவனமுடன் சென்று வருதல் சிறந்ததாகும்.திருமண சம்பந்தமான விசயங்களில் நீண்ட காலமாக ஏற்படடு வந்த தடைகள் விலகி திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.அடுத்தவர்களின் பிரச்சனைகளில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பிரச்சனைகளில் அகப்பட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.குடும்பத்தில் காரணமற்ற மனக் கசப்புகளும் சச்சரவுகளும் வந்து விலகிப் போகும்.. பூர்வீக சம்பந்தமான குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சற்று குறைந்து ஓரளவு மன நிம்மதி அடைவீர்கள்.வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்படலாம்.உறவினர்களின் வரவுகளால் எதிர் பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். பழைய வீடு மற்றும் நில்களை விற்றுப் புதிய வீடு நிலம் வாங்க எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீரவேண்டி மிகுந்த பொருட் செலவுகளைச் செய்வதின் பேரில் பிரச்சனைகளைக் குறைத்துக்கொளளுவீர்கள். உத்தியோகத்துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் பிரச்சனைகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது.வேலை இல்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்பு சம்பந்தமாக பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.

சிறப்புபலன்கள்:- பொருளாதாரத்தில் எதிர் பாராத மிகுந்த முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத் துறையைச் சார்ந்தவர்களுக்கு உத்தியோக உயர்வும் நினைத்த இடங்களுக்குப் சம்பள உயர்வுடன் கூடிய பணி இட மாற்றமும் ஏற்படலாம்.

இராசியான எண்:-5,2
இராசியான நிறம்:-பச்சை,வெள்ளை
இராசியான திசை:-வடக்கு,மேற்கு

பரிகாரம்:-திங்கள்,புதன் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் மற்றும் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வெள்ளை,பச்சை ஆடைகளைத் தானம் செய்து வர அனைத்து தோசங்களும் நீங்கி நற் பயனைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோவிஷ்ணு: ப்ரசோதயாத்!

2.ஓம் காத்யாயின்யாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!---என்று மந்திரம் சொல்லி வழிபட்டு வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசி ஆகிய கடகத்திற்கு 2ல் செவ்வாயும்,4ல் சனியும்,5ல் ராகுவும் புதனும்,6ல் சூரியனும்,7ல் சுக்கிரனும்,9ல் சந்திரனும்,10ஆம் இடமாகிய மேசத்தில் வியாழனும்,11ல் கேதுவும் அமர்ந்து இருப்பதால் தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்படுவதன் மூலமாக குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.ஆடு மாடு போன்றவற்றை விற்பனை செய்வோர்கள், கார் லாரி போன்ற வாகனங்களின் வியாபாரிகள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், சினிமா நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,திருமண மண்டபங்கள் மற்றும் திருமண தகவல் நிலையங்களை நடத்துபவர்கள்,நகைக் கடை நடத்துபவர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அரசுத் துறையை சார்ந்த கலைக் கல்லூரி சார்ந்தவர்கள்,கட்டிட சம்பந்தமான மண் மணல் சிமிண்ட் மற்றும் செங்கல் வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,நவரத்தின வியாபாரிகள்,கட்டிட சம்பந்தமாகிய காண்டிராக்ட்.கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடையப் போகும் காலமாகும். நீண்ட காலமாக உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பொருளாதரரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்று மாறி முன்னேற்றமான சூழ் நிலைகள் உருவாகும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் ஈடுபடுவோர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும்.பழுது பட்ட பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டு வெற்றி பெறுவீர்கள். தங்களுக்குச் செய் தொழிலில் சிற்சில பிரச்சனைகள் வந்த போதிலும் மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்துக் கொள்ளுவீர்கள்.புதிதாகிய தொழில்களை தொடங்குவதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லதாகும்.நெடுங்காலமாக பிரிந்து போன கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும்..காதல் சம்பந்தமான விசயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுமூகமான நல்ல சூழ்நிலை உருவாகும்.கலைஞர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைப்பதோடு புதிய ஒப்பந்தங்களும் உண்டாகும்.தங்கள் உடல் நிலையில் நோய்கள் குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள்.

சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் வெகு காலமாக எதிர் பார்த்து வந்த அரசு சம்பந்தமான உதவித் தொகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.நீண்ட காலமாகக் காணாமற் போன நபர்கள் மற்றும் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். செய் தொழிலில் புதிய பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண்:-6,4
இராசியான நிறம்:-வெள்ளை,கருப்பு
இராசியான திசை:-தென்கிழக்கு,வடமேற்கு

பரிகாரம்:-வெள்ளி,ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்து மஹாலட்சுமி வழிபாடு,சூரிய வழிபாடு செய்து வெள்ளை மற்றும் கருப்பு வஸ்திரம் மற்றவர்களுக்குத் தானம் கொடுத்து,அன்ன தானம் செய்து வர கிரக தோசங்கள் குறைந்து நல்ல பலன்களைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் பார்க்கவாய வித்மஹே
அசுராச்சார்யாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!

2.ஓம் பிரம்ம புத்ராய வித்மஹே
ஸைம் ஹிகேயா தீமஹி
தந்நோ ராஹீ: ப்ரசோதயாத்!என்று ஜெபம் செய்து வழிபாடு செய்து வர கிரக தோசங்
கள் தீர்ந்து நன்மை உண்டாகும்.


5.சிம்மம்:-சிமம்மராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசிக்கு1ல் செவ்வாயும்,3ல் சனியும்,4ல் ராகுவும் புதனும,5ஆம் இடமாகிய தனுசில் சூரியனும்,6ல் சுக்கிரனும்,8ல் சந்திரனும்9ல் வியாழனும்,10ல் கேதுவும் அமர்ந்து இருப்பதால் தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.சமுதாய முன்னேற்றம் மற்றும் பொது நலத் தொண்டுகளில் ஈடு பட்டு நற் பெயர் புகழ் அடைவீர்கள்..பழைய வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் எதிர் பாராத விதமாக திருமணம் நடை பெற வாய்ப்பு உள்ளது..மாணவர்கள் கல்வியில் கல்வி பயிலும் இடங்களில் சிற்றில சச்சரவுகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழிலில் காரணமற்ற பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.திருமணம் ஆகாத மூத்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். பொருளாதாரத்தில் வெகு நாட்களாக இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம். தங்கம் வெள்ளி போன்ற உலோகப் பொருள் வியாபாரிகள்,நெருப்பு ராணுவம்,காவல் துறை சார்ந்தவர்கள்,பூமி சம்பந்தமான நில புலன்களை வாங்குவோர் விற்போர்கள்,மின் சார சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,காரமான சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விபாரிகள்,ஹோட்டல் பணி செய்வோர்கள்,பூஜைப் பொருட்களின் வியாபாரிகள், இணைய தளங்களை நடத்துபவர்கள்,முதியோர் இல்லம் வைத்து இருப்பவர்கள்,பூ பழம் மற்றும் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,கம்யுட்டர் துறைகளில் பணி ஆற்றுபவர்கள ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த கடன் கொடுத்த பணம் பொருட்கள் திரும்பக் கைக்கு வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.குல தெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது.உடல் நிலையில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.விளையாட்டுத் துறையினருக்கு எதிர் பாராத பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும்.அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.தம்மிடம் வேலை செய்யும் அடிமை ஆட்களால் பொருள் வரவும்அவர்களால் ஏற்பட்டு வந்த மனக் குழப்பங்களும் தீரும்.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்று கால தாமதம் ஏற்படலாம்.

சிறப்பு பலன்கள்:-வெகு காலமாக எதிர் பார்த்து முயற்சித்து வந்து வெளி நாடு சென்று வருதல் போன்ற விசயங்களில் எதிர் பாராமல் மற்றவர்களின் உதவிகளின் மூலமாக வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பொருட் செலவுகளும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

இராசியான எண்:-3,9
இராசியான நிறம்:-மஞ்சள்,சிகப்பு
இராசியான திசை:-வடகிழக்கு,தெற்கு

பரிகாரம்:-வியாழன்,செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து சிவன்,முருகள் ஆலய வழிபாடு செய்து வெள்ளை,சிகப்பு ஆடை தானம் செய்து வர அனைத்து தோசங்களும் நீங்கி நற் பயனைச் செய்யும்!

மந்திரம்:-1ஓம் தக்ஷிணா மூர்த்தயே ச வித்மஹே
த்யாநஸ்த்தாய தீமஹி
தந்நோ தீஸ: ப்ரசோதயாத்!

2.ஓம் சுப்ரமண்யாய வித்மஹே
மஹா சூராய தீமஹி
தந்நோ ஸ்கந்த: ப்ரசோதயாத்! என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களுது ஜென்ம ராசி ஆகிய கன்னிக்கு 2ஆம் இடத்தில் சனியும்,3ல் ராகுவும் புதனும்,4ல் சூரியனும்,5ஆம் இடமாகிய மகரத்தில் சுக்கிரனும்,7ல் சந்திரனும்,8ல் வியாழனும்,9ல் கேதுவும்,12ல் செவ்வாயும் அமர்ந்து இருப்பதால் உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவகுள் ஏற்படக் கூடிய காலமாகும்.சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்கள் தடையின்றி நிறைவேறலாம்.மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டி கொண்டு மன நிம்மதி இழக்காதீர்கள். குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் மற்றும் புகழ் அடைவீர்கள். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்வெகு காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவிகளால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடிச் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு குடும்பச் சொத்துக்களை விற்பதன் மூலமாகப் பணம் வந்து சேரலாம்.அநாதைக் குழந்தைகளுக்கு உதவிகள் செய்வதன் மூலம் மன நிறைவடைவீர்கள்.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களை விற்றுப் புதிய வீடு வாகனங்களை வாங்குவீர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது. பொருளாதாரத்தில் இது வரை இருந்து வந்துள்ள பிரச்சனைகள் வெகுவாகக் குறைந்து ஓரளவு மன நிம்மதி அடைவீர்கள்.விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்கள் மூலமாக நல்ல பயன் அடையலாம். கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் சிற்சில தடைகள் வந்து சேரும்.பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்..இரும்பு இயந்திரம்,
இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், எண்ணை,பல சரக்கு வியாபாரிகள்,பழைய இரும்பு தகரம் போன்ற பொருட்களின் வியாபாரிகள்,துப்புரவுத் தொழிற் செய்வோர்கள்,வழக்குறைஞர்கள்,சட்டத் துறை சாரந்த இதர வல்லுனர்கள்,பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பெட்ரோல் டீசல்,மண் எண்ணை போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,அழுகல் பொருட்களின் வியாபாரிகள்,புத்தக வியாபாரிகள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,பேப்பர் பேனா பென்சில் நோட்புக் போன்ற தொழிற் செய்வோர்கள்,கவிஞர்கள் பாடலாசிரியர்கள் எழுத்தாளர்கள்,மருத்துவத் துறை சார்ந்தவர்கள்,மருத்துவர்கள்,மூலிகை சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்,உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைய வாய்ப்பு உள்ளது. புதிய இடங்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடி விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். நீண்ட காலமாக பிரச்சனையில் இருந்து வந்துள்ள கோர்ட் வழக்கு சம்பந்தமான விசயங்களில் மற்றவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகளைப் பெறுவீர்கள்.


சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்
வாய்ப்புகள் உள்ள காலமாகும்.

இராசியான எண்:-5,8
இராசியான நிறம்:-பச்சை,நீலம்
இராசியான திசை:-வடக்கு,தென்மேற்கு

பரிகாரம்:-புதன்சனிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாவிஷ்ணு,ஐயப்பன் வழிபாடு செய்து பச்சை,நீல நிற ஆடைகளைத் தானம் செய்து அன்ன தானம் செய்து வர சகல தோசமும் தீர்ந்து நல்ல பலன்களைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்!

2.ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!-என்று ஜெபம் செய்து வழிபாடு செய்து வர சகல கிரக தோசங்களும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.

7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம இராசியாகிய துலாத்திற்கு 1ல் சனியும்,2ல் ராகுவும் புதனும்,3 ஆம் இடமாகிய தனுசில் சூரியனும்,
4ல் சுக்கிரனும்,6ல் சந்திரனும்,7ல் வியாழனும்,8ல் கேதுவும்,11ல் செவ்வாயும் அமர்ந்து இருப்பதால் சகோதரர்களில் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வெகு தூரப் பயணங்களால் எதிர் பாரத்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும்..தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உடம்பில் வாயு வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம்.புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற வீண் பிர்ச்சனைகள் உருவாகி மனக் கசப்புகள் ஏற்பட்டுத் திரும்ப ஒன்று சேருவார்கள்.புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.செய் தொழிலில் வங்கிகளின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் சிறிது காலதாமதம் ஆகலாம். தந்தை வழியின் மூலமாக வர வேண்டிய சொத்துக்கள் கை வந்து சேரும்.தீர்த்த யாத்திரைகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.வங்கிகளின் மூலமாக கேட்டிருந்த கடன் தொகைகள் மற்றவர்களின் உதவியால் கிடைக்க வாய்ப்பு உள்ள ஆண்டாகும்.உடல் நிலையில் சுரம் மற்றும் உஷ்ணம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது. பழைய இரும்புகள்,இயந்திரம் இராசயனம் போன்ற தொழிற் சாலைகளில் பணி செய்வோர்கள்,இரும்புப் பொருட்களை வாங்குவோர்கள்,விற்பனை செய்வோர்கள்,பலசரக்கு மற்றும் எண்ணை வியாபாரிகள்,அழுகல் சம்பந்தமான மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சி துறை சார்ந்தவர்கள்,ஆசிரம வாசிகள்,மடாதிபதிகள்,பொதுப் பணிகளைச் செய்வோர்கள்,
மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,ஹோட்டல் பணிகளைச் செய்வோர்கள்,துப்புரவுத் தொழிலாளர்கள்,மிசினரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,கிரேனெட் போன்ற கல் வியாபாரிகள்,தரகு ஏஜன்சி குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவீர்கள். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்ற சூது விளையாட்டுக்களின் மூலமாகப் பணம் வந்து சேர வாய்ப்பு உள்ள காலமாகும்..அரசுத்துறை சார்ந்த வழக்குறைஞர்கள்,
மருத்துவர்கள்,மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள்,உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு அரசின் பாராட்டு மற்றும் பரிசுகள் கிடைக்க உள்ளது.வெளிநாடுகளில் வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.புதிய ஆடை மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்படும்.காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் தேடி வரும்.வண்டி வாகனங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்.


சிறப்புபலன்கள்:-குடும்பத்தில் தடை பட்ட சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறும்.விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலோடு லாபம் தரும் காலமாகும்.புதிய முயற்சிகள் வெற்றி தேடித் தரும்.

இராசியான எண்:-6,8
இராசியான நிறம்:-வெள்ளை,நீலம்
இராசியான திசை:-தென்கிழக்கு,தென்மேற்கு

பரிகாரம்:-வெள்ளிசனிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாலட்சுமி வழிபாடு,சனீஸ்வர வழிபாடு செய்து வெள்ளை மற்றும் நீல வஸ்திரம் மற்றவர்களுக்குத் தானம் கொடுத்து வர கிரக தோசங்கள் குறைந்து நல்ல பலன்களைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் பார்க்கவாய வித்மஹே
அசுராச்சார்யாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!

2.ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்! ---என்று மந்திரம் சொல்லி வழிபட்டு வரவும்.

8.விருச்சிகம்;:- விருச்சிகராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசி ஆகிய விருச்சிகத்திற்கு 1ல் ராகுவும் புதனும்,2ல் சூரியனும்,3ல் சுக்கிரனும்,5ல் சந்திருனும்,7ல் கேதுவும்,10ஆம் இடமாகிய சிம்மத்தில் செவ்வாயும்,12ல் சனியும் அமர்ந்து இருப்பதால் கணவன் மனைவி உறவுகளுக்குள் இருந்து வந்த நாட் பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேரும் காலமாகும்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல பெயர் புகழ் மற்றும் பரிசுகள் கிடைக்கும்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய நினைப்பவர்களுக்கு வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.கணவன் மனைவி உறவுகளுக்குள் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சகோதர சகோதரிகளுடன் சிற் சில பொருளாதாரம் மற்றும் சொத்து விசயங்களுக்காக சில மனக் கசப்புகள் வந்து சேரலாம்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.கோர்ட் வழக்கு சம்பந்தமாக நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்ப்புக் கிடைக்கும் காலமாகும்.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்படலாம்.திருமணம் ஆகாத பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகும். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடிர் தன வரவுகள் ஏற்படலாம்.வண்டி வாகனங்களில் பயணம் செய்வோர்களும்வாகன ஓட்டுனர்களும் மிகவும் கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும். கூட்டுத் தொழிற் செய்யும் முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது.பூர்வீகச் சொத்துக்களை விற்பதன் மூலமாகப் பொருள் வரவுகள் உண்டாக வாய்ப்பு உள்ள காலமாகும்.கம்யுட்டர் தொழிற் செய்வோர்கள்,பேராசிரியர்கள்,பூ பழம்,நறுமணப் பொருட்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,அரசுத்துறை சார்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,மடாதிபதிகள்,ஆலயப்பணி செய்வோர்கள்,அற நிலையத் துறை சார்ந்தவர்கள்,பொது நலத் தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,ரத்தின வியாபாரிகள்,அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த விஞ்ஞானிகள்,பிளாஷ்டிக் பேப்பர் போன்ற தொழிற்சாலைகளை நடத்துபவர்கள்,பைனான்ஸ் தொழிற் செய்பவர்கள்,தரகு மற்றும் குத்தகை சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,தண்ணீர் கூல்டிரிங்ஸ் போன்ற திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,கடல்சார் துறைகளைச் சார்ந்தவர்கள்,உப்பு மற்றும் உர வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.
அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும்.ஒரு சிலருக்கு பெண்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகளுடன் காரணமற்ற வீண் மனக் கசப்புகள் வந்து சேர இருப்பதால் முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

சிறப்பு பலன்கள்:-திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் நிறைவேறும்.புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரக்கூடிய சிறந்த காலமாகும்.நாட்பட்ட வழக்கு விசயங்களில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.

இராசியான எண்:-7,3
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு,மஞ்சள்
இராசியான திசை:-வடமேற்கு,வடகிழக்கு

பரிகாரம்:-திங்கள்,வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து கணபதி,சிவன் வழிபாடு செய்து கருஞ் சிகப்பு,மஞ்சள் வஸ்திர தானமும் செய்து வர சகல கிரக தோசமும் நீங்கி நற்பலன் உண்டாகும்!

மந்திரம்:-1.ஓம் ஜைமினி கோத்ராய வித்மஹே
தூம்ர வர்ணாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்!

2.ஓம் ஆங்கிரஸாய வித்மஹே
சுரா சார்யாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்!என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

9.தநுசு:தனுசுராசி அன்பர்களே இப் புத்தாண்டில் உங்களுக்கு ஜென்ம ராசி ஆகிய தனுசிற்கு 1ல் சூரியனும்,2ல் சுக்கிரனும்,4ல் சந்திரனும்,5ல் வியாழனும்,6ல் கேதுவும்,9ல் செவ்வாயும்,11ல் சனியும்,12ல்ராகுவும் புதனும் அமர்ந்து இருப்பதால் உறவினர்களின் திடீர் வரவுகளால் மன தைரியமும் பொருள் வரவும் உண்டாகலாம்.சகோதர சகோதரிகளுடன் வீண் மன சஞ்சலங்களும் பிரச்சனைகளும் உருவாகும். பெண்களால் தென் திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவுகள் உண்டாலாம்.
யாத்திரையின் போது மிக கவனமுடன் சென்று வருதல் நல்லது. புதிய வீடு நிலம் வாங்குவதற்காக வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரயவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்கள் மற்றும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.பங்கு வர்த்தகம்,அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள்,நெருப்புத் தொழிற் செய்வோர்கள்,ஜவுளி நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்காதீர்கள். உடல் நிலையில் கண் காது வாய் பற்கள் போன்றவற்றில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாது தொல்லைகளுக்கு ஆளாக வேண்டி வந்து பின் சரி செய்து விடுவீர்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதன் மூலமாக வீண் பிரச்சனைகளைக் குறைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவி உறவுகளில் வெகு காலமாக ஏற்பட்டு இருந்த விரிசல்கள் நீங்கி மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் தீருவதற்காக ஆபரேசன் போறன்ற காரியங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன நிம்மதியும் பொருளாதார முன்னேற்றம் காண்பதற்கான வழி முறைகளும் வந்து சேரும்.மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்தாலும் பண விசயங்களுக்காக பிறருக்காக ஜாமீன் போடுதல் போன்ற காரியங்களில் தலையிட்டாலும் வீண் பிரச்சனைகள் வந்து சேரலாம். சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக தன வரவுகள் ஏற்படலாம்.ஆலயத் திருப்பணிகளுக்கான முயற்சிகளில் பங்கு கொண்டு சமுதாயத்தின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நெருப்புத் தொழிற் செய்வோர்கள்,கேஸ் மற்றும் நிலக்கரி,மண் எண்ணை,பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள்,
மின்சார சம்பந்தமான பொருட்களை உற்பத்தி விற்பனை செய்யும் வியாபாரிகள்,இராணுவம் காவல்துறை,தீயணைப்புத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள்,மசால் பொருட்களின் வியாபாரிகள்,விளையாட்டுத் துறைகளைச் சார்ந்த வீரர்கள் மற்றும் வல்லுனர்கள்,காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,ஹோட்டலில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.

சிறப்பு பலன்கள்:-வெகு காலமாக விரும்பி வந்த புதிய வாகனங்கள் மற்றும் நில புலன்களை வாங்குவீர்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரக் கூடிய மிகச் சிறந்த காலமாகும்.

இராசியான எண்:-2,9
இராசியான நிறம்:-வெள்ளை,சிகப்பு
இராசியான திசை:-மேற்கு,தெற்கு

பரிகாரம்:-திங்கள்,செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன்,
முருகன் ஆலய வழிபாடுகளைச் செய்து வெள்ளைசிகப்பு நிற ஆடைகளைத்(வஸ்திரம்) தானம் செய்து வர சகல கிரக தோசமும் நீங்கி நற்பலன் உண்டாகும்!

மந்திரம்:-1.ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!

2.ஓம் சுப்ரமண்யாய வித்மஹே
மஹா சூராய தீமஹி
தந்நோ ஸ்கந்த: ப்ரசோதயாத்! என்று ஜெபம் செய்து வழிபாடு செய்து வர சகல கிரக தோசங்களும் நீங்கி நற் பலன்கள் உண்டாகும்.

10.மகரம்: மகரராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசி ஆகிய மகரத்திற்கு 1ல் சுக்கிரனும்,3ல் சந்திரனும்,4ல் வியாழனும்5ல் கேதுவும்,8ல் செவ்வாயும்,10 ஆம் இடமாகிய துலாத்தில் சனியும்,11ல் ராகுவும் புதனும்,12ல் சூரியனும் அமர்ந்து இருப்பதால் யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில காரியங்களை நிறை வேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.தீராத நாட் பட்ட நோய்கள் தீர புதிய முயற்சிகளை மேற் கொள்ளுவீர்கள்.உடம்பில் கண் காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகும்.வராத நாட்பட்ட கடன் கொடுத்து இருந்த பணம் மற்றவர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.மாணவர்களுக்கு கல்வி பயிலும் இடங்களில் அவப் பெயர்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் கல்வி பயிலுதல் நல்லது.வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும்.காதல் விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும்.பொருளாதாரம் சற்று சுமாராகவே இருபப்தால் புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள்.ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ள ஆண்டாகும்.பிரிந்து போன கணவன் மனைவிகள் மற்றும் உறவினர்கள் திரும்ப ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வருவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது.உத்தியோகம் இல்லாதவர்களுக்குப் புதிய உத்தியோகங்கள் கிடைகக் கூடிய காலமாகும்.வேற்று மதத்தவரால் வெளி நாடுகளுக்குச் சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.உத்தியோகம் பார்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுடன் கூடிய பணி இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ள காலமாகும்.புதிய நண்பர்கள் மற்றும் உற்றார்உறவினர்களால் எதிர் பாராத சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள்.மஹான்களின் தரிசனங்களால் மனம் நிம்மதி அடையும் காலமாகும்.வெளி நாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். கலைத்துறை சார்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள்,சினிமா நாடகம் போன்றவற்றை நடத்துபவர்கள்,அலங்கார நிலையங்கள் வைத்து இருப்பவர்கள்,திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள்,கார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள்,நடிகர் நடிகைகள்,கட்டிட சமபந்தமான செங்கல் மண் மணல் சிமிண்ட்,கம்பிகள் போன்ற பொருட்களின் வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,
இராசயனத் தெழிற்சாலைகளில் பணி செய்வோர்கள்,மத போதகர்கள், புளிப்பு சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,எண்ணை வியாபாரிகள்,பலசரக்கு கடைகளை நடத்துவோர்கள்,தரகுத் தொழிற செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.

சிறப்பு பலன்கள்:-தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளை இட மாற்றம் செய்வதன் மூலம் மன மகிழ்ச்சியும்,பொருள் வரவும் உண்டாகும். வெளி நாட்டில் விசிப்பவர்கள் தாய்நாடு சென்று தனது உறவுகளைச் சந்தித்துப் பின் திரும்ப வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:-6,8
இராசியான நிறம்:-வெள்ளை,நீலம்
இராசியான திசை:-தென்கிழக்கு,தென்மேற்கு

பரிகாரம்:-வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாலட்சுமி மற்றும் ஐயப்பன் வழிபாடு செய்து வெள்ளை,நீல வஸ்திரங்களைத் தானம் செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை தரும்!

மந்திரம்:-1.ஓம் பார்க்கவாய வித்மஹே
அசுராச்சார்யாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!என்று மந்திரம் சொல்லி வழிபாடு செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

2.ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்!---என்று மந்திரம் சொல்லி வழிபட்டு வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

11.கும்பம்::-கும்பராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசி ஆகிய கும்பத்திற்கு 2ல் சந்திரனும்,3ல் வியாழனும்,4ல் கேதுவும்,7ல் செவ்வாயும்,9ல் சனியும்,10ல் ராகுவும் புதனும்,11ல் சூரியனும்,12ல் சுக்கிரனும் அமர்ந்து இருப்பதால் யாத்திரைகளால் ஆதாயம் இல்லை.பெண்கள் விசயத்தில் அவப் பெயர்கள் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது.பூமி நிலம் சம்பந்தமாகிய கோர்ட் வழக்கு விசயங்களுக்கான முடிவுகளை இன்னும் சற்று கால தாமதமாகவே எதிர் பார்க்கலாம்.கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைய கால தாமதம் ஆகலாம்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள செருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். செய் தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மன சஞ்சலங்கள் தீரந்து நிம்மதி அடைவீர்கள்.தாய்வழி மாமன் மூலம் சில பிரச்சனைகள் வந்து சேரும். மற்றவர்களை நம்பி பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம்.தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். வெளி நாட்டு விசயங்களில் எதிர் பார்த்த நபர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகம் பாரப்பவர்களுக்கு மேலரிகாரிகளுடன் மனக் கசப்புகளும் அவர்களால் பணி இட மாற்றமும் ஏற்படலாம்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.மாணவர்களுக்குப் புதிய கல்வியில் சேருவதற்கான நல்ல மதிப்பெண்களையும் பரிசு மற்றும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் புதிய குழப்பங்களும் பொருட் செலவும் உண்டாகலாம்.பெண்களால் செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வெகு தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்வட்டித் தொழிற் செய்வோர்கள் ,அரசு வழக்கறிஞர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,கார் லாரி போன்ற வாகன உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர்கள்,ஆடு மாடுகளை விற்பனை செய்வோர்கள்,பால் வளத்துறை சார்ந்தவர்கள்,கலை கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்,இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,சிற்றுண்டி உணவு வியாபாரிகள்,காய்கரி வியாபாரிகள்,மருந்துப் பொருட்களை விற்பனை செய்வோர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,நாடகத் துறை சார்ந்தவர்கள்,மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள்,கவிஞர்கள் பாடலாசியர்கள், எழுத்தாளர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களாகிய நோட்டு மற்றும் புத்தகம் பேனா பென்சில் பேப்பர் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவீர்கள்.காதல் சம்பந்தமான பெண் விசயங்களில் மிகு சிரமத்தின் பேரில் நல்ல செய்திகள் வந்து சேரும்.அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ள மிகச் சிறந்த ஆண்டாகும். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகளோடு பாராட்களும் பெறுவீர்கள்.
தந்தையின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

சிறப்பு பலன்கள்:-குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.பெண்களால் எதிர் பாராத பாராத ஆதாயங்களை அடையக் கூடிய காலமாகும்.ரேஸ் லாடரி போன்றவற்றின் மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகும்.

இராசியான எண்:-5,6
இராசியான நிறம்:-பச்சை,வெள்ளை
இராசியான திசை:-வடக்கு,தென்கிழக்கு

பரிகாரம்:-புதன்,வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து பச்சை மற்றும் வெள்ளை நிற வஸ்திரங்களைத் தானம் செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை தரும்!

மந்திரம்:- 1.ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்!

2.ஓம் பார்க்கவாய வித்மஹே
அசுராச்சார்யாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!என்று மந்திரம் சொல்லி வழிபாடு செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நற்பலன் உண்டாகும்.

12.மீனம்;:-மீனராசி அன்பர்களே இப் புத்தாண்டில் தங்களது ஜென்ம ராசியாகிய மீனத்தில் சந்திரனும்,2ல் வியாழனும்,3ல் கேதுவும்,6ல் செவ்வாயும்,8ல் சனியும் 9ல் ராகுவும் புதனும்,10ல் சூரியனும்,11ல் சுக்கிரனும் அமர்ந்து இருப்பதால் கணவன் மனைவி உறவுகளுக்குள் சிறிய பிரச்சனைகளுக்காக வீண் மனக் கசப்புகள் வந்து சேரும்.அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.ஆலயத் தொண்டுகளிலும்,பொதுநலச் சேவைகளிலும் பிரியமுடன் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நாட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் மிகு எச்சரிக்கையுடன் இருக்கவும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகளால் மீண்டும் தொல்லைகள் வந்து நீங்கும்.தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,ஆலயப் பணி செய்வோர்கள்,இன்சினியரிங்,கம்யுட்டர் போன்ற துறை சார்ந்தவர்கள,பூ பழம் நறுமன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,
மடாதிபதிகள்,வேதம் ஓதுபவர்கள்,மந்திரிப் பதவிகள் வகிப்பவர்கள்,பூஜைப் பொருட்களின் வியாபாரிகள்,முதியோர் இல்லங்களை நடத்துவோர்கள்,அக்னி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,விதை வித்து மற்றும் தானிய சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,மருந்து வியாபாரிகள்,மருத்துவர்கள்,
திரவ சம்பந்தமான ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து நீங்கும்.பொதுத் தொண்டுகளைச் செய்வோர்களுக்கு நற் பெயர் புகழ் உண்டாகும். பங்காளிளுடன் சேரந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள்.வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். நண்பர்களால் பொருள் நஷ்டமும் மன சஞ்சலமும் ஏற்படலாம்.புதிய ஆடை அணிகலன்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கக்கூடிய காலமாகும். வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு பழுது பார்க்கும் புதிய செலவுகள் வந்து சேரலாம்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற சச்சரவுகள் ஏற்பட்டு பிரச்சகைள் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும்.அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் மற்றவர்களின் உதவிகளோடு சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பொதுத் தொண்டுகளை மிகவும் பிரயமுடன் செய்து சமுதாயத்தில் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.உத்தியோகத் துறையினர்கள் தாங்கள் பணி ஆறறும் இடங்களில் முன் கோபத்தை தவிர்துப் பணி செய்தல் நல்லதாகும்.காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். உடம்பில் வாயு மற்றும் சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும்.யாத்திரையின் போது வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வர நல்லதாகும்.உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களாலேயே ஆதாயமும் அடைவீர்கள்.கல்வித் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல பெயர் புகழும் கல்வி தீர்க்கமும் உண்டாகும்.

சிறப்பு பலன்கள்:-புதிய தொழில் முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகு சிரமத்தின் பேரில் சரி செய்து தொழில் தொடங்குவீர்கள்.வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து வந்த பண உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ள ஆண்டாகும்.

இராசியான எண்:-2,3
இராசியான நிறம்:-வெள்ளை,மஞ்சள்
இராசியான திசை:-மேற்கு,வடகிழக்கு

பரிகாரம்:-திங்கள்,வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் ஆலய வழிபாடு மற்றும் சிவ ஆலய வழிபாடு செய்து வெள்ளை,மஞ்சள் வஸ்திரங்களைத் தானம் செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை தரும்!

மந்திரம்:-1.ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!

2.ஓம் ஆங்கிரஸாய வித்மஹே
சுரா சார்யாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்!என்று ஜெபம் செய்து வழிபாடு செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நற் பலன்கள் உண்டாகும். சுபம்!


 

இணையத்தள உரிமை ஜோதிடம்.கொம் 2007 - 2010