|
ஜோதிடம் |
 |
எண் ஜோதிடம் |
 |
இராசி பலன் |
|
|
|
 |
தியானம் |
 |
மந்திரம் |
 |
சித்தமருத்துவம் |
|
 |
2011ம் இராசிபலன்கள்
|
|
|
|
Dr.P.Esakki |
|
 |
|
ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி
IBAM, RMP,DISM |
|
தமிழ்நாடு, இந்தியா |
|
தொலைபேசி
: 0091-4633-243029 |
|
செல்
: 00919842529691, 00919842510578 |
|
ஆன்மீகம் ,தியானம்,
மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான
பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும் |
|
இணையத்தளம் :
www.gnanayohi.com |
|
|
|
பணம் அனுப்ப |
|
NAME :
P.ESAKKI |
|
BANK : INDIAN
OVERSEAS BANK |
|
A/C No. : 9419 |
|
BRANCH :
KADAYANALLUR |
|
DISTRICT :
TIRUNELVELI |
|
TAMILNADU |
|
INDIA |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
எண் ஜோதிடம்
|
|
6-2-2012 to 12-2-2012 |
|
எண் 1 |
|

|
உ எண் ஜோதிடம் 6-2-2012முதல்12-2-2012வரை
1,10,19,28ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும,கூட்டு எண்ணாகவும், பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு விபரீத எண்ணங்களால் காவல் துறை தண்டனைக்குஆளாக நேரலாம் என்பதால் கவனம் தேவை பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.புதிய ஆடை,அணி கலன்கள் வாங்குவீர்கள். ஏதிர் பார்த்த பணம் கை வந்து சேரும்.குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது. கோர்ட் வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடம்பில் வயிறு மற்றும் சுரம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்..வேற்று மதத்தவரால் வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்..உத்தியோகத் துறையினர்கள் லாபம் அடைவார்கள்.தீhத்த யாத்திரை சென்று வருவீர்கள். புதிய நிலம் சம்பந்தமான பேச்சுககளைத் தள்ளிப் போடவும்.ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,சினிமா, நாடகத் துறை சார்ந்தவர்கள் நற் பலன் அடைவார்கள்.
அதிர்ஷ்டமான எண்:-5 அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை அதிர்ஷ்டமான திசை:-வடக்கு சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும். |
|
எண் 2 |
|

|
2,11,20,29ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதை தள்ளிப்போடுதல் நல்லது. தந்தைவழி சொத்துக்கள் கிடைக்கும். வாய் மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.மாணவர்கள் கல்வியில் நற்பெயர் எடுப்பார்கள்.அரசியல் வாதிகள் கவனமுடன் செயல் படவும.சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகக் கூடிய காலமாகும். புதிய வீடு நிலங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் எதிர் பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.குழந்தையின் உடல் நிலையில் சிலபாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளது.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் யாத்திரை சென்று வருவது நல்லது. பிள்ளைகளால் சிறிது மன நிம்மதி உண்டு.நண்பரின் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். மஹான்களின் தரிசனங்களால் நிம்மதிகள் அடைவீர்கள்.
அதிர்ஷ்டமான எண்:-2 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-மேற்கு சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும். |
|
எண் 3 |
|

|
3,12,21,30ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறு பாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.கமிசன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. புதிய வீடு சம்பந்தமான காரியங்களை சற்று தள்ளிப் போடுதல் நல்லது. மாணவர்கள் கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களை பெறுவார்கள்.கடன் கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற காரியங்களில் தலையிடுவதை தவிர்த்தல் நல்லது.கார்,லாரி போன்ற வாகன தொழிற்சாலை நடத்துவோர்கள் இவற்றில் பணி புரிவோர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோர்கள் இலாபம் அடைவார்கள்.அனாதைச் சிறுவர்களுக்கு உதவுவதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.சுப காரிய நிகழ்ச்சிகளாக வெளியூர்ப் பயணம் உண்டாகும்..
அதிர்ஷ்டமான எண்:-1 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-கிழக்கு சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும். |
|
எண் 4 |
|

|
4,13,22,31ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது. தாய் மகன் உறவில் சில பிரச்சனைகள் உருவாகலாம். தாய்வழிச் சொந்தங்களுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும். மற்றவர்களுக்கு உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வேலையாட்களால் மன நிம்மதி உண்டாகும்.வீடு நிலம் சம்பந்தமான அரசுக்கடன் மற்றும் உதவித் தொகைகள் கிடைக்கச் சற்று காலதாமதம் ஆகலாம்.குல தெய்வ ஆலயப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்ய பண உதவிகள் கிடைக்கும்.மருத்துவத் துறை சார்ந்த மருத்துவர்கள்,மருந்து வியாபாரிகள்,ஜவுளி,நூல் வியாபாரிகள் நற்பலன் அடைவர்.அண்டை அயலாருடன் மிகுந்த கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.
அதிர்ஷ்டமான எண்:-1 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-கிழக்;கு சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும். |
|
எண் 5 |
|

|
5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். நண்பர்களால் எதிர் பாராத சில நற் செய்திகள் வந்து சேரும். தாய்க்கு உடல் நிலையில் கவனம் தேவை குடும்பத்தில் சிற் சில சச்சரவுகள் வந்து நீங்கும். நாட் பட்ட நோய்க்கு புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும்.பங்குத் தொழிற் செய்வோர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லதாகும்.உடம்பில் நரம்பு வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.மனைவி வழி மூலம் தனவரவு உண்டாகும்.ரேஸ்,லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வந்து சேரலாம்.. பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்றுகால தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான எண்:-6,5 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை,பச்சை அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்குவடக்கு சாந்தி:-மஹாலெட்சுமி,மஹா விஷ்ணு வழிபாடு செய்து வரவும். |
|
எண் 6 |
|

|
6,15,24.ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம்;. உங்களுக்கு. பொதுக் காரியங்கள் சம்பந்தமாக போட்ட திட்டங்கள் நிறை வேறக் கூடிய வாய்ப்புள்ளது.குடும்பத்தில் சுப காரியச் செலவுகள் உண்டாகும்.புதிய தொழில் ஆரம்பம் செய்வதை தள்ளி; போடவும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கண்ணாயிருங்கள்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டைப் பழுது பார்த்து கட்டுவீர்கள்.வழக்கு விசயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். உறவினர்களின் வரவுகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகும். கண் மற்றும் காதுகளில் நோய் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.தடைப்பட்ட கட்டிட வேலைகள் நடைபெறும்.
அதிர்ஷ்டமான எண்:-8 அதிர்ஷ்டமான நிறம்:-நீலம் அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.. |
|
எண் 7 |
|

|
7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு மூத்த சகோதர்களால் லாபம் உண்டு. தொலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில்களைத் தொடங்குவதைச் சற்று தள்ளிப் போடவும்.. விவசாயம் செய்வோர்கள் புதிய விளை நிலங்கள் வாங்குவதன் மூலம் நல்லலாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நெருப்பு,மின்சாரங்களில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகளில் மற்றவர்களில் தலை யிடுதலால் நல்ல முடிவுகள் கிடைக்கப் பெறுவதன் மூலம் மன நிம்மதியை அடைவீர்கள்.நண்பர்களால் உதவிகள் ஏதும் இல்லை. யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்வது நல்லதாகும்.. விவசாயிகளுக்கு எதிர் பார்த்தை விட நல்ல லாபம் தரும்.உடம்பில் நரம்பு மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் காலமாகும்.
அதிர்ஷ்டமான எண்:-2 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-மேற்கு சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும். |
|
எண் 8 |
|

|
8,17,26ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு யாத்திரைகளை விலக்குதல் நல்லது.பிள்ளைகளுக்கு எதிர் பாராத வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் கிடைக்கும். திருமண காரியங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது.எதிர் பாராமல் ஏற்படும்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவீர்கள். உடம்பில் இதயம் மற்றும் இரத்தத் தொடர் பிணிகள் வராதவாறு கவனிக்கவும்.கோவில் குளம் போன்ற தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.வட்டித் தொழிற் செய்வோர்கள்,தரகு மற்றும் கமிசன் ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,மருத்துவர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பிற மதத்தவரால் ஆதாயம் உண்டாகும்.தேசிய தொண்டுகளில் பிரியமுடன் தன்னை ஈடு படுத்திக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்டமான எண்:-3 அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள் அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும். |
|
எண் 9 |
|

|
9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்குவதில் பொருட் செலவு உண்டாகும்.அடுத்தவர்கள் விசயத்தில் அக்கறை எடுத்து அவமானப் பட நேரிடலாம். எச்சரிக்கை தேவை. வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கட்டிட சம்மந்தமான கல் மணல் மண், செங்கல் வியாபாரிகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த உதவியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.பொருளாதார விஷயங்களில் மன நிம்மதிகள் உண்டாகும்.கொடுக்கல் வாங்கல் போன்ற விசயங்களில் மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இட மாற்றங்கள் உண்டாகும்.உடம்பில் தலை மற்றும் முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். கை விட்டுப் போன பொருள் சம்பந்தமில்லாத நபர்களால் வீடு வந்து சேரும்.
அதிர்ஷ்டமான எண்:-9 அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு அதிர்ஷ்டமான திசை:-தெற்கு சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும். தொடரும்! |
|
|
|
|
|