தமிழில் உங்கள் பலன்களை அறிய ஜோதிடம்.கொம்
 

முதற்பக்கம் எண் ஜோதிடம் இராசி பலன் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு
 

ஜோதிடம்

எண் ஜோதிடம்
இராசி பலன்
   
தியானம்
மந்திரம்
சித்தமருத்துவம்

2010ம் இராசிபலன்கள்
2009ம் சனிப் பெயர்ச்சி
 

Dr.P.Esakki

ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி : 0091-4633-243029

செல் : 00919842529691, 00919842510578

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்

இணையத்தளம் : www.gnanayohi.com 

பணம் அனுப்ப

NAME : P.ESAKKI

BANK : INDIAN OVERSEAS BANK

A/C No. : 9419

BRANCH :  KADAYANALLUR

DISTRICT : TIRUNELVELI

TAMILNADU

INDIA

 
 

சித்தமருத்துவம்
 


சித்தமருத்துவம்

மஞ்சள்
1.அலர்ஜி,தும்மல் தீர:-போதிய அளவு மஞ்சளை உரலில் இட்டு நன்றாக இடித்துத் துணியில் வடி கட்டி ஒரு வேளைக்கு கால் கரண்டி(மூன்று வரல்களால் ஒரு தடைவ எடுக்கும் மருந்து)வீதம் காலை மாலை ஆகிய இரு வேளையிலும் நன்றாகக் கொதிக்க வைத்த வெந்நீரிலாவது அல்லது சூடான பசுவின் பாலிலாவது இட்டு அத்துடன் போது மான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கலந்நு உண்டு வர ஜல தோசம்,அலர்ஜி,தும்மல்,நாசியில் நீர் ஒழுக்கு,சைனஸ் போன்ற தொல்லைகள் தீரும்.இதையே நீடித்த நாட்கள் உண்டு வர மதுமேகம்,
குஷ்டம்,நாட்பட்ட புண்கள் ஆகியன தீரும்.

2.நீரழிவு தீர:-இந்தச் சூரணத்துடன் காய்ந்த நெல்லிக்காயைக் கசாயம் வைத்து சேர்த்து அருந்தி வர மதுமேகமாகிய நீரழிவு நோய் விரைவில் குறையும்.

3.குஷ்டம் தீர:-மஞ்சள் சூரணத்துடன் வடிகட்டிய பசுவின் கோமியத்தை சேர்த்து அருந்தி வர குஷ்டம் தீரும்.இத்துடன் சம அளவு மர மஞ்சள் சூரணம் சேர்த்துக் கலந்து கொடுப்பது மிகவும் நன்மை தரும்.

4.அம்மை,கொப்பளங்கள் தீர:-மஞ்சள் பொடியுடன் வேப்பெண்ணை,
தேங்காய் எண்ணை அல்லது வேப்பிலை ஆகிய ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து அரைத்து அம்மை நோய்கள் மற்றும் கட்டிகள் கொப்பழங்கள் ஆகியவற்றுக்கு மேற் பூச்சாகப் போட்டு வர விரைவில் ஆறி உலரும்.

5.தொண்டை கபம் தீர:-இந்தச் சூரணத்துடன் பால் சேர்த்துக் காய்ச்சி காலை மாலை அருந்தி வர தொண்டையில் ஏற்படும் கபக் கட்டுகள் நீங்கும்.

6.ஜலதோசம் தீர:-மஞ்சளைத் தீயிற் கொழுத்தி அதனால் வரும் புகையை நாசியிற் காட்டி உறிஞ்சி வர(இழுத்து) வர ஜலதோசம்.
தலைவலி,நாசி அடைப்பு முதலியவைகள் போகும்.

7.பெண்களுக்கு:-மஞ்சளை உறைத்துப் பூசிக் குழித்து வர வியர்வை நாற்றம்,தோசங்கள் நீங்கி அழகு உண்டாகும்.

8.சேற்றுப்புண் தீர:-மஞ்சளை அரைத்துக் காலில் சேற்றுப் புண் உள்ள இடத்தில் பூசி வர ஆறி உலரும்.

9.பெண்களுக்கு ஏற்படும் முகப் பரு தீர:-மஞ்சளுடன் பால் சேர்த்து அரைத்து முகத்திற் பூசி சிறிது நேரம் காயவைத்துப் பின் முகத்தை அலம்பி வர நாளடைவில் முகப்பருக்கள் தீர்ந்து முகம் அழகு பெறும்.

10:-கால் ஆணி தீர:-மஞ்சளையும் மருதாணி இலையும் சேர்த்து அரைத்து இரவு வேளையில் கால் ஆணி மீது வைத்துக் கட்டி வர சீக்கிரத்தில் மாறும்.(ஆணி என்பது காலில் வரும் ஒரு விதமான சிறிய புற்றுப் போன்ற நோய் ஆகும்) தொடரும்!


 

 
 

இணையத்தள உரிமை ஜோதிடம்.கொம் 2007 - 2008